A few words about item

பார்த்திபன் கனவு - கல்கி

சோழ மன்னரான பார்த்திப சோழன், பல்லவர்களின் ஆட்சியின் கீழ் செயல்படும் ஒரு குறுநில மன்னனாக இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளை "பார்த்திபன் கனவு" என்னும் நாவலின் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். பல்லவர்களுக்கு கப்பம் செலுத்தி ஆட்சி செய்வதை விரும்பாத பார்த்திப சோழன், சுதந்திர மன்னனாக தன் நாட்டை ஆள விரும்புகிறார். சோழ சாம்ராஜத்தை நாடெங்கும் பரப்புவது மட்டுமல்லாமல் கடல் கடந்து எல்லா தேசங்களிலும் புலிக்கொடியை ஏற்ற பெரியதோர் கனவு காண்கிறார்.

அவ்வண்ணமே பல்லவ சக்கரவர்த்தியை எதிர்த்து போருக்கும் தயாராகிறார். அதற்கு முன் தன் புதல்வனான விக்கிரமனிடம் தன் கனவுகளைப் பற்றி எடுத்துரைத்து, ஒருவேளை போரில் தான் உயிர் துறந்தாலும், தன்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமென்று விக்கிரமனிடம் வாக்குறுதி பெற்றுக் கொள்கிறார். போரில் வீர மரணமும் அடைகிறார்.

பார்த்திப சோழனின் ஆட்சிக்காலத்தில் அவருடைய கனவு நிறைவேறவில்லை என்றாலும், அடுத்து வரும் சந்ததியினரின் ஆட்சியில் பார்த்திபன் பாதிக்கும் கனவு நிறைவேறியதா? என்பதே கதையின் மையக்கரு.

தந்தையின் மனோரதம் நிறைவேற விக்கிரம சோழன் எடுக்கும் முயற்சிகளும், அதனால் ஏற்படும் திருப்பங்களும் கதையை விறுவிறுப்பாக நகரச் செய்கிறது. தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் வீரதீர இளைஞனாக விக்கிரமன் வலம் வருகிறார். தந்தையின் மரணத்திற்குப் பின் அவருடைய தாய் அருள்மொழி ராணியின் அரவணைப்பில் வளர்கிறார். இவர்களுக்கு சிவனடியார் ஒருவரின் மூலம் ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கின்றன. பார்த்திப சோழரின் தமமையனான மாரப்பபூபதி விக்கிரமனுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வில்லனாக வரம் வருகிறார்.

படகோட்டியாக வரும் பொன்னன், கதை முழுவதும் விக்கிரமனுக்கு துணை புரியும் விசுவாச மிக்க சோழநாட்டு பிரஜையாக வருகிறார்.

அடுத்ததாக, பல்லவ சக்கரவர்த்திக்கு எதிரான முயற்சியில் தேசப்பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிறார் விக்கிரமன். இதற்கிடையில் பல்லவ மன்னரின் மகள் குந்தவிக்கும், விக்கிரமனுக்கும் இடையே காதல் மலர்கிறது.

இறுதியாக, யார் அந்த சிவனடியார்? எதற்காக விக்கிரமனுக்கு உதவ முன் வரவேண்டும்? மாரப்பபூபதியின் சதித்திட்டம் என்னவானது? விக்கிரமன் குந்தவிதேவியின் காதல் கை கூடியதா? விக்கிரமன் தேசப்பிரஷ்ட தண்டனையிலிருந்து மீண்டாரா? தந்தையின் விருப்பப்படி சோழ நாட்டை சுதந்திர நாடாக்கி விக்கிரம சோழன் மன்னராக முடி சூட்டப்பட்டாரா? என்பதே மீறி கதை.

Total Number of visitors: 40

No of users in online: 27