மனோகரா
நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய 90க்கும் மேற்பட்ட நூல்களில் ஒன்று மனோகரா என்ற நாடகம். இந்நாடகம் மனோகரா என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாரிக்கப்பட்டு அப்படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திரைக்கதை வசனம் தீட்டப்பட்டது.
இப்படத்தின் கதை, சோழ நாட்டை ஆள்பவர் புருஷோத்தமன் என்பவர். அவருடைய மகன் இளவரசன் மனோகரன். பட்டத்தரசி மகாராணி பத்மாவதி. கணவனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் ஒரு பட்டத்தரசி.மகாராணி பத்மாவதிக்கு பணிப்பெண்ணாக வந்த வசந்தசேனையின் வலையில் புருஷோத்தமன் விழுந்து அவள் சொற்படி நடக்கிறார். இந்நிலையில் மனோகரன் பிறந்த நாளை முன்னிட்டு அரண்மனையில் ஒரு நாடகம் நடக்கிறது.
இந்த நாடகத்தை நடத்துபவன் வசந்தசேனையால் விஷம் கொடுக்கப்பட்டு மீண்ட கேசரிவர்மன் என்பவன். இவன் அரூபமாக வாழ்கிறான்.
இந்நாடகம் மூலம் மனோகரன் தனது பாட்டனாரை(பட்டத்தரசியின் தந்தை)பாண்டிய மன்னன் முத்து விஜயன்கொன்று ரத்ன சிம்மாசனத்தையும் கைப்பற்றினான் என்று அறிகிறான். அதற்குப் பழிவாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறான்.
போர்க்களத்திலே அரசன் முத்து விஜயனும் மனோகரனும் எதிர்கொள்கின்றனர். அப்போது நடக்கும் உரையாடல்.
முத்துவிஜயன்: வாடா தம்பீ!.... வாள் பிடிக்கத் தெரியாத வாலிபனே ! வளைத்துவிட்டோம் கோட்டையை என்று எண்ணிவிடாதே
மனோகரன்: கேள்விப்பட்டிருக்கிறேன் நீர் வீரர்.... வாய் வீச்சிலே என்று !
[முத்துவிஜயன் கோபாவேசத்துடன் வாளை வீசிக்கொண்டே....!]
முத்துவிஜயன்: வாள் வீச்சிலுங் கூடத்தான்....
முடிவில் மனோகரன் அரசன் முத்துவிஜயனைக் கொன்று அவரது மகள் விஜயாவை திருமணம் செய்து கொண்டு நாடு திரும்புகிறான். நாடு திரும்பிய மனோகரன் அங்கு அவன் அனுப்பிய ரத்ன சிம்மாசனத்தில் வசந்தசேனை அமர்ந்திருப்பதைக் கண்டு கோபம் கொள்கிறான். எனினும் மகாராணி பத்மாவதி மனோகரனிடம் அரசருக்கும் வசந்தசேனைக்கும் எந்த ஆபத்தும் அவன் மூலம் வரக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். இந்நிலையில் வசந்தசேனை அரசன் முன்பே மனோகரனை வேசிமகன் என்று அழைக்கிறாள். அரசன் கோபம் கொள்வதைக் கண்டு அவனது கோபத்தை தணிக்கவும் அதனை நிரூபிக்கவும் அமைச்சர் சத்தியசீலருக்கும் மகாராணி பத்மாவதிக்கும் கள்ள உறவு இருப்பதாக கூறி நாடகமாடுகிறாள் வசந்தசேனை. அரசரை நம்பவும் வைக்கிறாள்.
எனவே அரசர் மகாராணியை சிறைக்கும், மனோகரன் வசந்த சேனையை அவமதித்ததற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்கிறார். மனோகரன் கோபம் கொண்டு அரசவைக்கு வரும் போது இரும்பு சங்கிலியால் அவனை கட்டி அழைத்து வருகிறார்கள்.
இந்த அரசவைக் காட்சி தான் படத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அரசன்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து. அழைத்து வரவில்லை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்.
அரசன்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ
மனோகரன்: கட்டளையா இது? கரைகாண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே! முத்தே! தமிழ்ப் பண்ணே! என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே...சந்தனத் தொட்டிலிலே ! வீரனே ! என் விழி நிறைந்தவனே தீரர் வழி வந்தவனே ! என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ... அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து சபை நடுவே நிறுத்தி சந்தோஷத்தை கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தனியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?
அரசன்: ஆத்திரத்தைக் கிளப்பாதே ! நிறைவேற்று அரசன் உத்தரவு
மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அரசன்: தாய்க்கும் தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டியெறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன்: பரசுராமன் - அவதாரம். மனோகரன் மனிதன் !
அரசன்: என் உத்தரவை நிறைவேற்ற போகிறாயா இல்லையா?
மனோகரன்: நிறைவேற்றுகிறேன் - மன்னிப்பு கேட்க வேண்டும்-மனோகரன்.
அரசன்: ஆமாம்; அதுவும் அரை நொடியில்
மனோகரன்: அரை நொடியென்ன? அதற்குள்ளாகவே ! ஆனால் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தெரியுமா? கோமளவல்லி-கோமேதகச் சிலை-கூவும் குயில்-குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை- கொடிய நாக்கை-என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு - அதை எதிர்த்தால் உம்மையும், உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்த பட்டாளத்தையும் பிணமாக்கிவிட்டு...சூன்யக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை-சுடுகாட்டுக்கனுப்பி விட்டேன்... என்று சுழலும் வாளுடன்... சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்புக் கேட்க வேண்டும். நிறைவேற்றட்டுமா-அந்த உத்திரவை?...... தயார்தானா...? தயார்தானா?...
இறுதியில் மனோகரனை கொலைக்கலத்திற்கும், பட்டத்தரசியையும், மனோகரன் மனைவி விஜயாவையும் சிறையிலும் அடைகிறான் அரசன். கொலைக்கலத்திற்கு செல்லும் வழியில் வசந்தசேனையின் கணவன் கேசரிவர்மன் அரூபமாக வந்து மனோகரனை காப்பாற்றுகிறான். இந்நிலையில் வசந்தசேனை தனது மகனை இளவரசனாக்க வேண்டும் என்கிறாள். அரசன் மறுக்கவே அவள் தனது காதலனும் இமயபுரி வேந்தனுமான உக்கிரசேனனுக்கு சோழ சாம்ராஜ்யத்தை கைப்பற்ற அழைக்கிறாள். உக்கிரசேனன் அட்சயன் என்பவனிடம் ஓலை கொடுத்து அனுப்புகிறான். வரும்வழியில் மனோகரன் அவனைத் தாக்கி அந்த கடிதத்தை எடுத்து அரண்மனைக்கு புறப்படுகிறான்.
மேலும் உக்கிரசேனனும் அவன் படைவீரர்களும் சாது கூட்டம் வடிவில் உள்ளே நுழைகிறது. உக்கிரசேனனும் வசந்தியும் தனிமையில் இருக்கும்பொழுது அரசன் புருஷோத்தமன் பார்த்து விடுகிறான். வசந்தசேனை புருஷோத்தமனை சிறையில் அடைக்கிறாள். அரண்மனையில் மனோகரனுக்கு குழந்தை பிறக்கிறது. மேலும் அரண்மனையில் உலாவும் அட்சயன் மனோகரன் தான் என்பதையும் தெரிந்து கொண்டு கைது செய்ததுடன் அவன் குழந்தையை கொல்ல முற்படுகிறாள். மகாராணி பத்மாதேவியும் நிலைமை தெரிந்துகொண்டு, பொறுமைக்கு எங்கே இருக்கிறது பெருமை ? மனோகரா ! "பொறுத்தது போதும். பொங்கியெழு !" என்கிறாள். என்கிறார்.மனோகரன் உக்கிரசேனை கொல்கிறான். வசந்தசேனை அவள் கணவனால் கொல்லப்படுகிறாள்.
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய நாடகத்தை கலைஞர் அவர்கள் சில இடங்களில் மாற்றம் செய்துள்ளார்.
1.மனோகரின் மனைவி விஜயா பகைவனின் மகள் என்று காட்டப்பட்டுள்ளது. ஆனால் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகத்தில் அவ்வாறு காட்டப்படவில்லை.
2. வசந்தசேனையின் மகன் வசந்தன் ராஜ உடையில் இருக்கும் பொழுது அவனை அரசன் என்று நினைத்து வசந்தசேனை கொன்று விடுகிறாள். ஆனால் கலைஞர் எழுதிய நாடகத்தில் வசந்தசேனை மனோகரனை கொல்ல முற்படும் பொழுது வசந்தன் குறுக்கே பாய்ந்து விடுவதாக உள்ளது.
3. பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தில் வசந்தசேனை தன் மகனை கொன்றதால் தன்னைப் தானே குத்திக் கொண்டு சாகிறாள். ஆனால் கலைஞர் எழுதிய நாடகத்தில் வசந்தசேனையை அவள் கணவன் கொல்வதாக உள்ளது.
4. கொலு மண்டபத்தில் அரசர் மனோகரனை கொல்ல உத்தரவு தருவதாக கூறி அவன் தன் மைந்தன் அல்ல என்று கூறுகிறார். அந்நிலையில் மனோகரன் அவரை தாக்க முற்படும் பொழுது மகாராணி தடுக்கிறாள். இதனால் அரசன் மனம் திருந்துவதாக பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தில் உள்ளது.
5.பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தின் இறுதியில் பாண்டிய நாடு சோழ நாடு மீது போர் தொடுக்கிறது. ஆனால் கலைஞர் நாடகத்தில் பாண்டிய நாடு சோழ நாட்டிற்கு உதவி புரிவதாக உள்ளது.
6. வசந்தசேனைக்கு இமயபுரி வேந்தன் காதலனாக இருப்பதாக கலைஞரின் மனோகராவில் உள்ளது.