இனியவை இருபது

இனியவை இருபது

கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அரசுமுறைப் பயணமாக இருபது நாட்களாக ரோம், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், செர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, இலண்டன் நாடுகளுக்கு சென்று வந்ததை பற்றி அரசு ஏடான தமிழரசில் எழுதிய பயண நூலே 20 கட்டுரைகள் கொண்ட இனியவை இருபது.

பயணநூல்களில் பொதுவாக பார்க்க வேண்டிய இடங்கள்,வாங்க வேண்டிய பொருட்கள்,உன்ன வேண்டிய உணவுகள் பற்றிய செய்திகள் அதிகமாக இருக்கும்.ஆனால் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்த பிறகு அந்த நாட்டின் வரலாறு, அந்த நாடு யாரால் முன்னேற்றப்பட்டது, யாரால் சீரழிவுக்கு ஆட்பட்டது என்பதை தெளிவாகாகக் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த நாட்டின் கலைஞர்கள் மற்றும் படைப்புகளையும் சொல்கிறார். உரோமில் போப்பாண்டவரைக் காண சென்றபோது அவருக்கும் அவரது துணைவியாருக்கும் மட்டும் அனுமதி தரப்பட்டபோது அவருடன் வந்த கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி அவரையும் உள்ளே கூட்டிச் சென்றது, பின்னர் போப் அவர்களை சந்தித்து முடித்தபோது தன்னுடன் வந்தவர்கள் தங்களை காண முடியாமல் வெளியே இருக்கிறார்கள் அவர்களும் தங்களைக் காண அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி அவர்களும் போப் ஆண்டவரை சந்திக்க வைக்க முயற்சி எடுத்தது அந்த இடத்தில் கலைஞரின் அறிவுக்கூர்மைக்கு ஓர் சான்று.

ஒவ்வொரு நாட்டிலும் பயணம் செய்யும்போது அந்த நாட்டைப்போல் தமிழ்நாட்டையும் அடுத்த நிலைக்கு கொண்டுவர விரும்புகிறார். உதாரணமாக கடல் கொண்ட பூம்புகாரை எந்த நாட்டின் உதவி கொண்டாவது மீட்க முடியுமா என்று பெருமூச்சு விடுகிறார்.

இங்கிலாந்தில் பேட்டியின் போது தொழில் துறையில் தி மு க வின் சாதித்த சாதனை என்ன என்று கேட்கும்போது மற்றவர்களைப் போல் மூட்டி மறைக்காமல்,தற்போது தன்னிடம் புள்ளிவிவரம் இல்லை; ஆனால் தொழில் வளர்ச்சிக்காக எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை என்று உள்ளது உள்ளபடி அழுத்தமாக கூறுகிறார்.

உண்மையில் தமிழ்நாட்டிற்காக இல்லாத துறைகளிலும் முன்மாதிரியாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.அவர் இல்லாதது தமிழ்நாட்டிற்கு பேரிழப்பே.

No of users in online: 127