பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊராட்சி திருவிளையாட்டம். இந்த ஊரில் ஜெயசீலன், அன்வர் மற்றும் புகழ்மணி ஆகிய 3 மூன்று மாணவர்கள் அவ் ஊரில் உள்ள சௌரிராசன் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருபவர்கள். ஜெயசீலன் வீட்டிற்கு ஜெசி, ஜெமினி மற்றும் சென்னையில் இருந்து கண்ணன் ஆகியோர் வந்துள்ளனர். ஒரு நாள் ஜெயசீலன், ஜெசி, ஜெமி மற்றும் கண்ணன் ஆகியோர் அந்த ஊரில் உள்ள சுயம்புநாதர் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜெசி கோவிலுக்கு வெளியே இருந்த "யாழி"யின் வாய்க்குள் பந்து போன்ற ஒரு கல்லை உருட்ட அங்கு சுரங்கம் ஒன்று தோன்றுகிறது.
இதை ஜெயசீலன் தன் நண்பர்களுடன் கூற அவர்கள் எல்லோரும் ஒருநாள் சேர்ந்து அந்த சுரங்கத்திற்கு செல்கின்றனர். அப்போது அந்த சுரங்கத்தில் ஒரு உருவத்தை பார்க்கின்றனர். சிறுவர்களுக்கே உண்டான பயத்துடன் மீண்டும் அந்த சுரங்கத்திற்கு மறுநாள் செல்கின்றனர். நண்பர்களில் சிலருக்கு அது கரடியாகவும் சிலருக்கு குரங்காகவும் தெரிகிறது. மேலும் அதனை செல்லப் பெயர் ஒன்று வைத்தும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். பின்னர் இந்த விஷயம் ஜெயசீலனின் அத்தைக்கு தெரிகிறது. அதன் பின்னர் அவர்கள் அந்த உருவத்தை தேடி கண்டுபிடித்தார்களா? அந்த உருவம் என்ன? என்பதை எஸ்.பாலபாரதி இளையோருக்காக ஒரு சஸ்பென்ஸ் நாவலாக கொண்டு சென்றுள்ளார்.
இப்புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் என்னைக் கவர்ந்தவை. ஒன்று இந்த கதையில் வரும் கண்ணன் ஆட்டிசம் குறைபாடு உடையவன். சிறுவர்களுக்கு சிறுசிறு புரிதல் பிரச்சினை இருந்தாலும் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்கேயும் செல்லுவது என்பது அவர்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையைக் காண முடிகிறது. இரண்டாவதாக நண்பர்கள் அவரவர் நண்பர்கள் வீட்டுக்கு செல்வதும் உதாரணமாக அன்வர் வீட்டில் அவனது தாயார் ஜெய்சீலனிடம் தோசை சாப்பிடு என்று அழைப்பதும் பெரியவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள்.
உறவுகளுக்கு இடையில் புரிதல் இல்லாமல் இருக்கும் இக்காலகட்டத்தில் வெவ்வேறு மதம் சார்ந்த நண்பர்கள்/மாணவர்கள் ஒற்றுமையுடன் இருக்க இது போன்ற புத்தகங்கள் மிகவும் அவசியம்.