இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் புத்தகமாக நான் இதைப் பார்க்கிறேன். ஆனால் இக்கதையில் அதிகமாக மன்னர்களின் முரட்டு குணங்களும் மூடநம்பிக்கைகளும் பதவி மிதப்பும் அதனால் மக்கள் அடைந்த வேதனைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நாவலை உன்னிப்பாக படித்தாலன்றி கதையின் போக்கு பிடிப்படாது. இதில் கூறப்பட்டுள்ள அரண்மனையின் தோற்றம் நம் கண்முன் காட்டுவதாக இருக்கிறது. கதையின் தொடர்ச்சி விட்டுவிட்டு படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சில இடங்களில் கூறப்படும் மன்னனின் குணங்கள், விவரிக்கப்பட்ட சடலத்தின் நிலை, கொடுமைப்படுத்தப்பட்ட விதங்கள் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது.

ஒரு சில இடங்களில் கூறப்படும் தத்துவங்கள் நன்றாக இருக்கிறது. இதில் "அஜ்யா" என்ற பெண் கூறும் மறுமொழி "நிகழ்காலத்தை எதிர்கொள்ள கடந்த காலம் தான் துணை நிற்கிறது" என்பது ஒவ்வொருவரும் இன்றைய வாழ்விலும் பின்பற்றுவதாக உள்ளது. கதையில் ஒவ்வொருவரின்  முடிவும் விசித்திரமானதாக உள்ளது இப்புத்தகத்தின் முடிவு போல.

No of users in online: 72