வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
ஒரு குறிப்பிட்ட கிராமப்புற மக்களின் பேச்சு வழக்கில் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் ஆரம்பத்திலும், கதாநாயகன்(பிச்சி) அறிமுகமான பின்னும் கதை மெதுவாகவே நகர்கிறது. பிச்சியுடன் மருதன் என்னும் கதாபாத்திரமும் ஒன்றாகவே வருகிறது. இவர்களுக்கு பாட்டய்யா என்ற முதியவர் அறிமுகம் ஆகிறார். ஜல்லிக்கட்டு காளைகளைப் பற்றி தன் அனுபவங்களின் மூலம் தனக்கு தெரிந்த விஷயங்களை அவ்விருடமும் பகிர்ந்து கொள்ளும் போது முதிர்ச்சியுடன் விளங்குகிறார் முதியவர் பாட்டய்யா.
பிச்சி என்பவன் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறான்? என்று விளக்கும் இடத்தில் தான் கதை சூடு பிடிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு ஒன்றில் தன் தந்தையை கொன்ற "காரி" என்னும் காளையை அடக்குவதற்காக பிச்சி களமிறங்குகிறான். காரியை அடக்குவதற்கு முன் பில்லை, கொராலு என்ற இரண்டு காளைகளை அடக்குகிறான். இந்த இடத்தில் பண்ணையார் தன்னுடைய கதாபாத்திரத்தில் சரியாக உள்ளார்.
பண்ணையாரின் காளையான காரியின் உருவத்தையும், அதன் ஒவ்வொரு அசைவையும், களத்தில் செயல்படும் விதத்தையும் தெளிவாக கூறியிருப்பது நன்றாக உள்ளது. பல வருடங்களாக மாடு அணைபவர்களுக்கு சவாலாக இருக்கிறது காரி. அதை அடக்குவதற்காகவே வந்த பிச்சியை பண்ணையாரும் ஆமோதிக்கிறார். அவ்வாறே பிச்சி தன் திறமையாலும் பலத்தாலும் காரியை வெல்லவும் செய்கிறான்.
இறுதியில் இத்தனை வருடம் தன்னுடைய பெருமையாகவும் மானம் காப்பதாகவும் இருந்து வந்த காளையை(காரி) காளையின் உரிமையாளரான பண்ணையார் சுட்டுக் கொல்வது போல் காட்டியிருப்பது சரியான முடிவாக இல்லை.
ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு மிருகவதை அல்ல!. தோற்றுவிட்டதற்காக அந்த ஜீவனைக் கொல்வதே மிருகவதை.
இப்புத்தகத்தை படித்து முடித்த பின் வாடிவாசலுக்கே நேராகச் சென்று ஜல்லிக்கட்டு பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு களத்தையும் காளையைப் பற்றியும், அதை அடக்கும் வீரர்களையும், அதற்கு தலைமை தாங்குபவர்களையும், சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தையும் நுணுக்கமாகக் கூறியிருப்பது சிறப்பு.