தோகை மயில் - கோவி.மணிசேகரன்
இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் புதினம் "தோகைமயில்" எனும் பெயரருக்கேற்றாற் போல் ரசிக்கும்படி வண்ணமயமாக உள்ளது. தோகை விரித்து ஆடும் மயிலை பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அதுபோல் இப்புத்தகத்தை படித்ததில் மிக்க மகிழ்ச்சியை உணர்கிறேன்.
ஏனென்றால் ஆசிரியர் இலக்கண நடையில் எழுதியிருந்தாலும் படிப்பதற்கு எளிமையாக உள்ளது. இவ்வரலாற்று புதினத்தில் நாயகனாக வரும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இளமை அழகு வீரம் கோத்திரம் மற்றும் நாயகியாக வரும் கோவையின் அழகு நடனம் பாவனை என இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் ரசிக்கும் படியாக வர்ணித்து இருக்கிறார் ஆசிரியர்.
இது மட்டுமல்லாது சூரியன், சந்திரன், அரண்மனை, ரதம், போர்க்களம் என குறிப்பிடும் அத்தனை இடங்களும், நம் கண்முன்னே சாட்சியாய் தோன்றிவதுபோல் உள்ளது. "தோகையின் நடனம்" குறித்து விவரிக்கும் இடங்களில் நாட்டிய அரங்கேற்றத்தையே நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது. சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களையும் குறிப்பிடும் வரலாற்று புதினமாகவும் உள்ளது.
இக்கதையில் நாயகனாக வரும் "மாமன்னன்' நெடுஞ்செழியனும், சேர நாட்டு இளவரசியான "தோகை"யும் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே காதல் கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த "கிள்ளிவளவன்" தன் மகளின் வயதிற்கிணையான தோகையை அவளின் நாட்டியத்தையும் அழகையும் கேட்டறிந்து காதல் கொள்கிறாள். அவளை அடைய சிறையெடுக்கவும் முயல்கிறான். சோழ இளவரசியான "கோப்பெருந்தேவி"யோ நெடுஞ்செழியனை மணமுடித்து பாண்டிய நாட்டுப் பட்டத்தரசியாக ஆசைப்படுகிறாள். இதற்கிடையில் மலையமான் நாட்டு இளவரசியான அம்பையும் பாண்டிய மன்னனை ஒருதலையாகக் காதலிக்கிறாள்.
மன்னன் நெடுஞ்செழியனும் இளவரசி தோகையும் சந்தித்தார்களா? சோழ மன்னன் கிள்ளிவளவனின் வயோதிகக் காதல் ஆசை நிறைவேறியதா? அம்பையின் ஒரு தலைக் காதல் வசப்பட்டதா? கோப்பெருந்தேவியின் கனவு என்றானது? இறுதியில் பாண்டிய நாட்டு மன்னனின் பட்டத்தரசியானது யார்? என்பதே கதை.