தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் - நா.முருகேசபாண்டியன்
ந.முருகேசபாண்டியன் அவர்கள் உயிர் எழுத்து, உயிர்மை, உங்கள் நூலகம் மற்றும் அந்தி மழை இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே "தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்" எனும் நூல்.
இப்புத்தகம் மொத்தம் 6 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை,
1. பரதேசி: துன்பக்கேணி நோக்கிய பயணம்
2. விஸ்வரூபப் பூச்சாண்டி
3. கத்தி திரைப்படம் முன் வைக்கும் அரசியல்
4. தமிழ்த் திரைப்பட உருவாக்கத்தில் நாவல்கள்
5. தமிழ்த் திரைப்படம் உயிர்த்தெழுமா?
6. ஒப்பனையில் ஒளிர்ந்திடும் கொட்டகைகள்: மதுரை நகரை முன்வைத்து ஆகியன.
விளிம்பு நிலை மக்களையும் பரதேசி படத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஆசிரியர் அதேபோல் கத்தி படத்தையும் கார்ப்பரேட் உலகையும் ஒப்பிட்டு எழுதி உள்ளார். அதே நேரத்தில் விஸ்வரூபம் படத்தில் நடித்த, திரையுலகில் அறிவு ஜீவி என்றழைக்கப்பட்ட "கமல்" அவர்களின் ஒவ்வொரு படமும் தமிழ்ச் சூழ்நிலையையும், தமிழ்த் திரைப்படத்தையும் எவ்வாறு கீழிறக்கியது என சில விவரங்களுடன் எழுதியுள்ளார்.
விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் என்ன முஸ்லீம் அமைப்பினர் கண்டன குரல் எழுப்பினர். எனவே தமிழக அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சினையைக் காட்டி தடை விதித்தது. ஆசிரியர் நா.முருகேச பாண்டியன் விஸ்வரூபப் பூச்சாண்டி என்ற கட்டுரையில் கமலஹாசனின் திரையுலகப் பிம்பத்தை மறுதணிக்கை செய்கிறார். மேலும் விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலமாக செய்தி சேனல்களின் சமூக அக்கறையை அம்பலமாக்கியுள்ளார்.
அதே நேரத்தில் ஆசிரியர் அவர்கள் 70-களில், மகேந்திரன், ருத்தரையா, பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற கலைஞர்கள் தமிழ் திரையுலகை சரியான திசை வழிக்குக் கொண்டு வந்ததை கமலஹாசனின் "சகலகலா வல்லவன்" என்ற திரைப்படம் மீண்டும் தமிழ்ச் சினிமாவை வணிக ஃபார்முலாவிற்குள் தள்ளியது என்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மிகுந்து காணப்படும் தென் மாவட்டங்களில் கமலஹாசன் தயாரித்த "தேவர் மகன்" ஆதிக்க சாதியினரின் பெருமையை தூண்டி விட்டதையும் அதேபோல் ஆதிக்க சாதியினரின் பழம்பெறும் வீரம் பேசும் விருமாண்டி திரைப்படம் ஆதிக்க சாதியினரும் தலித்துகளும் தொடர்ந்து மோதிக்கொள்ள வழிவகை செய்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ்த்திரை உலகில் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் நாவல்களால் வெற்றி, தோல்வி கண்ட திரைப்படங்களையும் விரிவாக எழுதியுள்ளார். 1935ல் வெளியான தமிழின் முதல் சமூக படமான "மேனகா" வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலான "மேனகா" என்ற நாவலையும், "பாலாமணி" அல்லது "பக்கா திருடன்" என்ற நாவல் "பாலாமணி" என்ற பெயரிலும், "ராஜாமணி" என்ற நாவல் அதே பெயரிலும், ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய "சந்திரகாந்தா" நாவல் அதே பெயரிலும், வை.மு.கோதைநாயகி அம்மாளின் நாவல்களான "ராஜமோகன்", ”அனாதைப் பெண்" மற்றும் கல்கி அவர்களின் "தியாக பூமி", "பார்த்திபன் கனவு", மு.வரதராசனின் "பெற்ற மனம்", அகிலனின் "பாவை விளக்கு", ரா.கி.ரங்கராஜனின் "சுமைதாங்கி" ராஜாஜியின் "திக்கற்ற பார்வதி", மணியனின் "இலவு காத்த கிளி" என்ற நாவல் "சொல்லத்தான் நினைக்கிறேன்" என பல நாவல்கள் திரைப்படமாக வெளியாகியுள்ளன என்கிறார் ஆசிரியர்.
ஜெயகாந்தன் அவர்களின் "உன்னைப்போல் ஒருவன்" 1965-இல் வெளியானது. மேலும் அவரின் "யாருக்காக அழுதான்", "காவல் தெய்வம்", "கருணை உள்ளம்", "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறான்", "புதுச்செருப்பு கடிக்கும்", "கரு", "ஊருக்கு நூறு பேர்" போன்றவை திரைப்படங்களாக வெளியாகி உள்ளன. இவற்றில் ஜெயகாந்தனின் நாவல்களை படமாக்கிய முயற்சிகள் பெரிய அளவில் வீச்சாக மக்களிடம் பரவவில்லை என்கிறார் ஆசிரியர் நா.முருகேச பாண்டியன்.
அதேபோல் கோவி.மணிசேகரனின் "தென்னங்கீற்று", மகரிஷியின் "பத்திரகாளி", மணியனின் "மோக முப்பது வருஷம்", புஷ்பா தங்கத்தின் "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது", சுஜாதாவின் "காயத்ரி", மெரினாவின் "தனிக்குடித்தனம்", ராஜேந்திரகுமாரின் "வணக்கத்துடைய காதலியே", சிவசங்கரில் "ஒரு சிங்கம் முயல் ஆகிறது" நாவல் "அவன் அவள் அது" என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளியாகின என்றும் வெகுஜன ரசனை சீரழிக்கின்ற இத்தகைய திரைப்படங்கள் வெளியான போது அவை பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்பது ஆறுதலான விஷயம் என்றும் கூறுகிறார்.
மேலும் கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்ட "தில்லானா மோகனாம்பாள்", உமா சந்திரன் அவர்களின் "முள்ளும் மலரும்", புதுமைப்பித்தனின் "சிற்றன்னை"(உதிரிப்பூக்கள் என்ற பெயரில் வெளியானது), பொன்னீலனின் "உறவுகள்" (பூட்டாத பூட்டுகள் -1980), இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப்புனல்"(கண் சிவந்தால் மண் சிவக்கும்-1983), தி.ஜானகிராமனின் "மோகமுள்"(1995), நாஞ்சில் நாடனின் "தலைகீழ் விகிதங்கள்"(சொல்ல மறந்த கதை-2002), கி. ராஜநாராயணன் "கிடை"(ஒருத்தி20054), சு.வெங்கடேசனின் "காவல் கோட்டம்"(அரவான்), பி.எச்.டேனியலின் "எரியும் பனிக்காடு"(பரதேசி), ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலின் ஒரு பகுதியை ஆதாரமாகக் கொண்டு வெளியான "நான் கடவுள்" என பல நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன என பட்டியலிடுகிறார்.
மக்களிடத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் மகுடம் சூட்டிய திராவிட இயக்கத்தினர் திரைப்பட ஊடகம் மூலம் மிகவும் பிரபலமடைந்தனர். கலைஞர் மு.கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோர் தங்களது வசனம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தனர். இதில் கலைஞர் கருணாநிதியின் "பூமாலை"(திரும்பிப் பார்), மலைக்கள்ளன், புதையல், அறிஞர் அண்ணா துரையின் "ரங்கூன் ராதா", மற்றும் ஏ.வி.பி ஆசைத்தம்பியின் "கசப்பும் இனிப்பும்(வாழ்வில் ஒரு நாள்) பல நாவல்கள் படமாக்கப்பட்டன என்கிறார் ஆசிரியர்.
தமிழ்த் திரைப்படத்துறையில் மிகவும் பிரபலமான, புகழ்பெற்ற வசனங்கள் கொண்ட "மனோகரா" என்னும் திரைப்படம் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டது. இப்படம் பம்மல் சம்பந்த முதலியார் எழுதப்பட்ட மனோகரா என்ற நாடக நூலின் மூலம் ஆகும் . பிரபலமான இப்படத்தையும் நூலையும் ஆசிரியர் ஏனோ மறந்துவிட்டார். மேலும் அகிலன் அவர்களின் கயல்விழி(மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்), ஷான் கருப்பசாமியின் "வெட்டாட்டம்" என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
1970-80களில் இளைஞர்கள் எவ்வாறு திரைப்படத் தாக்கத்துடன் இருந்தனர் என்று மதுரையை வைத்து அழகாக எழுதியுள்ளார். தமிழர் வாழ்க்கையில் மிக ஆழமாக எவ்வாறு திரைப்படம் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக சில நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர் நா.முருகேஷ் பாண்டியன். காரணமாக புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் புதுப் படத்திற்கு செல்வதும், வார இறுதி நாட்கள் மட்டுமின்றி கோவில் திருவிழா, கல்யாணம், சடங்கு போன்ற விழாக்களிலும் திரைப்படத்திற்கு செல்வது, தனக்கு பிடித்த நடிகருக்கு மட்டுமல்லாமல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் வைப்பது என தமிழர் வாழ்க்கையில் திரைப்படத் தாக்கத்தை விரிவாக சொல்லி உள்ளார்.
இப்போது நடித்து வரும் சிம்பு, தனுஷ், விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தமிழ் இளைஞர்கள் இடத்தில் ஏற்படுத்திய மாற்றம் பற்றியும் அவர்கள் திரைப்படங்களில் காட்டிய காதல் கொண்டாட்டங்களால் தமிழ்ச் சமூகம் சீரழிந்தது பற்றியும் ஆசிரியர் ஒரு நூல் எழுதினால் நலம் பயக்கும்.