இடக்கை நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்

இடக்கை நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்

இடக்கை எனும் இந்த நாவலில் மாமன்னர் ஔரங்கசீப் அவர்களின் ஆட்சி காலத்தில் சில நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அது மட்டுமல்லாமல்,  நீதி மறுக்கப்பட்டோரின் வாழ்க்கையைப் பற்றியும், அநீதியினால் சாமானியர்களுக்கு ஏற்படும் அவலங்களையும் அழுத்தமாகக் கூறுகிறார் ஆசிரியர் மாமன்னர் அவுரங்கசீப் தன்னுடைய மரணத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஞானி முகைதீன் இடம் கேட்கும் இடத்தில் இப்புத்தகம் மிகவும் சுவாரஸ்யம் பெறுகிறது.

ஔரங்கசீப் மற்றும் அவர் புதல்வி, பணிப்பெண் அஜ்யா, சத்கரை ஆட்சி செய்யும் பிஷாடன் எனும் மன்னன், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தூமகேது என்று ஒவ்வொருவருக்குமாக ஒரு கதை நகர்கிறது. ஔரங்கசீப் அவர்கள், தன் அன்பிற்குரிய மகளாய் இருந்தாலும் சட்டத்திற்கு எதிராக ஒரு செயலியில் ஈடுபடும்போது அவரை சிறையில் அடைப்பதாய் கூறப்படுகிறது. அதுபோல், தன் நம்பிக்கைக்கு உரித்தான அஜ்யா என்ற பணிப்பெண்ணை, சகோதரி என்று அழைப்பதாகவும் ஓரிடத்தில் கூறப்படுகிறது.

"உதிர்ந்த பூவை ஒட்ட வைக்க எந்த அரசனாலும் முடியாது" என்பதை ஔரங்கசீப் தன்னுடைய 88-ஆவது வயதில் தான் உணர்கிறார் என்பதாகும் கூறப்படுகிறது. இது போன்ற சில சம்பவங்கள் வியக்க வைப்பதாகவும், மெய்சிலிர்க்க  வைப்பதாகவும் உள்ளது.

பிஷாடன் எனும் மன்னனின் எண்ணங்கள் விசித்திரமாகவும் கொடூரமாக உள்ளது. இவ்வாறு குணம் கொண்டவர்களுக்கு மரணமும் கொடூரமாகத் தான் இருக்கும் என்று விளக்கியிருப்பது சிறப்பு. இக்கதையில், தூமகேது செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என்று பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அவ்வாறு சில இடங்களில் படிப்பவர்கள் மனதில் சில பெருமையும், கலக்கத்தையும் ஏற்படுத்துவது போல் உள்ளது.

நீதி, அநீதி இரண்டின் விளக்கமும் இப்புத்தகத்தின் பல இடங்களில் கூறப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடும் போது, ஒரு புழு தன நீதிக்காக கடவுளிடமே சென்று வாக்குவாதம் செய்யும்படியாக உள்ளது. அந்த பழுவிற்காக எழுதப்பட்ட வசனங்கள் மிகவும் அருமை¡. இறுதியில் அந்த புழுவே, அதாவது நீதியை வென்றது! எனவும் கூறப்பட்டிருப்பது சிறப்பு.

No of users in online: 117