இடக்கை - திரு.எஸ்.ரா.

இடக்கை - திரு.எஸ்.ரா.

திரு.எஸ்.ரா. அவர்கள் எழுதிய இடக்கை.வழக்கமாக நாம் படிக்கும் வரலாற்று புனைவுகளிலிருந்து இக்கதை சற்று மாறுபட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த காலகட்டத்தில் சமூகத்தின் பிடியில்  அகப்பட்ட அப்பாவி மக்களும் நிராதரவான பெண்களும் எப்படி எல்லாம்  துன்பப் பட்டனர் என்று அப்பட்டமாக எடுத்துரைக்கின்றது.  வழக்கமாக நாம் வாசிக்கும் நாவலை கருத்தில்கொண்டு இப்புத்தகத்தை நாம் அணுக முடியாது. இது எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்டு உங்களை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.

பெயருக்கு ஏற்றபடி இடக்கைப் பழக்கம் உடைய தூமகேது என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தியே கதை நகர்கிறது. சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நான் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடே என்று இக்கதை நமக்கு தீர்க்கமாக உணர்த்துகிறது. கதையின் தொடக்கம் அவுரங்கசீப்பின் முதுமை காலத்தை மையப்படுத்தி தொடங்கி மெல்ல நம்மை   நகர்கிறது.  இந்தியா என்னும் பழைய ஹிந்துஸ்தான்   முழுக்க விலகி வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அவலத்தை எடுத்துக்கூறும் நோக்கத்தோடு நாவல் உச்ச கட்டத்தை அடைகிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களுடைய சுயநலத்தால் தான் நிகழ்கிறது என்று எஸ்ரா அவர்கள் இந்த நாவலில் அடித்துக் கூறுகிறார்.  அஜயா என்னும் திருநங்கையின் கதாபாத்திரம் வலி மிகுந்ததாக உள்ளது. எப்பொழுதுமே பணம் படைத்தவர்கள் அப்பாவி மக்களையும் ஒடுக்கப்பட்ட பெண்களையும் சுரண்டி   பிழைக்கிறது என்பதுதான் அஜயா கதாபாத்திரத்தின் மூலம்    எஸ்ரா  அவர்கள் வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.

தூமகேதுவும் அஜயாவுகும் கதை முழுக்க பயணிக்கும் கனமான கதாபாத்திரங்கள். அவுரங்கசீப் வாழ்நாள் முழுவதும் தவறு செய்துவிட்டு முதுமைக் காலத்தில் தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணி வேதனைப் படுகிறார்.

வாழும் பொழுது வாழ்க்கையை பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் அகங்காரத்தோடு பணத்திமிரோடும் வாழ்ந்துவிட்டு முதுமை காலத்தில் ஐயையோ இப்படியெல்லாம் நடந்து கொண்டு விட்டோமே? என்று அழுது புலம்பும் பெருவாரியான மக்களின் மனசாட்சியாக அவுரங்கசீப்பின் புலம்பல்கள் இருக்கின்றன.

தமிழின் மிக முக்கியமான நாவல் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்.

No of users in online: 121