நெஞ்சுக்கு நீதி - பாகம் - 1 / 1
புதினங்கள், சிறுகதைகள், இலக்கியம், அரசியல் கட்டுரைகள், கடிதங்கள் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மற்றுமொரு படைப்பு சுயசரிதை. கலைஞரின் சுயசரிதை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் இதுவரை மொத்தம் ஆறு பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் பாகம் தினமணி கதிர் இதழில் வெளிவந்தது. மற்றைய பாகங்கள் குங்குமம் இதழில் வெளிவந்தன. நெஞ்சுக்கு நீதியின் முதல் பதிப்பு டிசம்பர் 1975 ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் பாகம் மொத்தம் 141 தலைப்புகளையும் / அத்தியாயங்களையும் 754 பக்கங்களையும் கொண்டது.
சுயசரிதையின் முதல் தலைப்பு-தொடக்கம். இத்தலைப்பில் பல்வேறு பணிகளுக்கிடையில் (முரசொலி இதழில் தொடர்கதைகள், அரசியல் கட்டுரைகள், அமைச்சர் பொறுப்பு, பின்னர் முதல்வர் பனிச்சமை, பல்வேறு கவியரங்குகளில் கவிதை பாடியது) எப்படி எழுதுவதற்கு நேரம் கிடைக்கிறது எனச் சொல்கிறார். 2-வது தலைப்பு-பிறந்த ஆண்டு. கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த ஆண்டு 1924. தான் பிறந்த அந்த வருடத்தில் தமிழகம்,இந்தியா மற்றும் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளையும் மாற்றங்களையும் பற்றி குறிப்பிடுகிறார். 3 மற்றும் 4-வது தலைப்புகளில் தனது தாய் தந்தையர் மற்றும் தான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கச் சென்றது பற்றி எழுதுகிறார்.
5-வது அத்தியாயத்தில் இருந்து கலைஞர் தனக்கு பிடித்த அரசியலை எழுத ஆரம்பிக்கிறார். 5,6 மற்றும் 7-வது அத்தியாயத்தில் 1916 ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் அது எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதனையும் பின்னர் 1930 இல் காங்கிரஸ் மந்திரி சபை முதன் முதலாக சென்னை மாநிலத்தில் பதவி ஏற்று கொண்டதையும், ராஜாஜி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அந்தத் தருணத்தில் இந்தியை பள்ளிக்கூடங்களில் கட்டாய பாடம் ஆக்கியதையும்(1938, பெப்ரவரி 25) அதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் குறிப்பிடுகிறார்.
8-வது அத்தியாயம் வடநாட்டில் காந்தியடிகள், ஜனாப் ஜின்னா மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளி பற்றியும் அதற்கு எதிர் மாறாக தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கும் முஸ்லிம் லீக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் பற்றியும், அவர் கையெழுத்து ஏடாக நடத்தி வந்த மாணவன் நேசன் பின்னர் அடுத்த படியாக 'முரசொலி' துண்டு வெளியீடுகளாக வந்தது பற்றியும் கூறுகிறார்.
9-வது அத்தியாயம் அவர் உருவாக்கிய "தமிழ்நாடு தமிழ் மாணவர்" மன்றம் அமைப்பைப் பற்றியும் மன்றத்தின் ஆண்டு விழா 1942-ஆம் ஆண்டு சிறப்பாக திருவாரூரில் கொண்டாடப்பட்டதையும் குறிப்பிடுகிறார். அப்போது கலைஞர் கருணாநிதி அவர்களின் வயது 18.
10 மற்றும் 11-வது அத்தியாயங்கள் கலைஞர் கருணாநிதி அவர்கள், தேர்வில் தோல்வி ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறியது பற்றியும் 12-வது அத்தியாயம் இளம் எழுத்தாளர் என்ற தலைப்பில் அவர்களின் எழுத்துக்களை பற்றியும் 13-வது அத்தியாயம் அவருடைய முதல் புத்தகம் 'கிழவன் கனவு', முரசொலியின் துண்டு அறிக்கை மற்றும் மேடைப்பேச்சுக்கு தயாராகிக் கொண்டது பற்றியும் எழுதியுள்ளார்.
14 மற்றும் 15-வது அத்தியாயம் கலைஞர் அவர்களின் திருமணம் மற்றும் அந்த திருமணத்தில் கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் 'கிந்தனார்' கதா காலட்சேபம் மற்றும் அதனால் ஏற்பட்ட அமளி துமளி பற்றி கூறியுள்ளார்.
.......தொடரும்