தன்னூத்து ராசா - தீன்
காணி நிலம், ஆனந்த விகடன், சிறுகதை காலாண்டிதழ், தொடுவானம், பாவையர் மலர் ஆகிய இதழ்களிலும் தமிழ் நெஞ்சம், கனலி போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்த எம்.எம்.தீன் அவர்களின் 13 சிறுகதைகள் தன்னூத்து ராசா என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.
ஏழைகளை கூர்ந்து நோக்கினால் நமக்கு அவர்களின் வாழ்வியலும் அவர்களின் சங்கடங்களும் அவர்களின் வேதனைகளும் வாழ்க்கை முறைகளும் நமக்கு தெரிய வரும். எழுத்தாளன் என்பவன் அடிமட்டத்தில் இருக்கும் ஏழைகளின் வாழ்க்கை பற்றி மனம் கசிந்து எழுதுகிறான். எழுதித் தீர்த்தாலாவது அவர்களுடைய இன்னல்களை களைய முடியுமா என்று நினைக்கிறான். மேலும் எழுத்தாளனுக்கு அங்கு தான் உரையாடல் நிகழ களம் கிடைக்கிறது. அவனுக்கு அங்கு அதிகமான கதைகளும் கிடைக்கிறது.
இந்த சிறுகதைகளில் அபரஞ்சி, மைம்பாத்து, அமலி மற்றும் சரோஜா, வாணி போன்ற ஏழைகளும் காணக் கிடைக்கிறார்கள்; கணவன் மனைவி அருகில் இருந்தும் விலகி வாழ்பவர்களும்; தூர இருந்தும் மனதால் இணைந்து வாழ்பவர்களும் உலா வருகிறார்கள். மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளைப் பற்றியும் எழுதி உள்ளார்.
அபரஞ்சி - பெயரே வித்தியாசம். அதனால் அவள் வாழ்க்கையில் படும் இன்னல்களும் வித்தியாசமாக இருக்கிறது.
கிபி 2040 - இது நிஜமாக நடக்குமா என்றால் நடக்கலாம். அப்படி நடந்தால் தந்தை-மகன், தாய் மகன் இந்த பாசம் எல்லாம் விடைபெறும். உலகம் அழியும்.
இந்த அழகான பூமிப்பந்தை இந்த மனித சமூகம் எந்த அளவுக்கு நாசப்படுத்தி வைத்திருக்கிறது என்பது நமக்குத் தெரியும். மனித சமூகம் தன்னைத்தானே மட்டுமல்ல; விலங்குகளையும் எப்படி சுவைக்கு அடிமைப்படுத்தி இருக்கிறது என்பதை தன்னூத்து ராசா என்ற மானின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே. ஆனால் இஸ்லாமிய ஆண் பெண்களின் வாழ்க்கை பிரிந்து இருப்பதற்கே. சல்லாதுணிக்குள் பாதிமுகம்... என்ற சிறுகதை எப்படி ஒரு இஸ்லாமிய ஆண், பெண்ணின் வாழ்க்கையை வெளிநாடு என்ற மாயப்பிசாசு பிரித்து வைக்கிறது என்பதை அது அனுபவிக்கும் ஒருவனின் வழியே சுட்டிக் காட்டுகிறது. பெண் முகத்தை மறைத்து சல்லாதுணிக்குள் அடைந்து கொள்கிறாள். ஆனால் ஆண் தன் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் நடைபிணமாக மற்றவர்கள் முன் சிரித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
வார்த்தை மனிதனைக் கொல்லுமா? ஆம், சொற்கங்கு - இச்சிறுகதை கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரிதலையும் பின்னர் அன்பின் மிகுதியால் இணைவதையும் சுட்டிக் காட்டுகிறது. காது மடலுக்குள் ஊசிக்குரலில் பேசிக் கொண்டே இருக்கும் காதற்பறவை அவள். அவன் அலுவலகம் விட்டு வந்தவுடன் ஆரம்பிக்கும் பேச்சு, இரவு வியர்வையில் நனைந்து அசதியில் தான் நிறைவடையும். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு சொல் ஏதோ ஒரு கோபத்தில் வெளிப்பட எப்படி இவர்களை பல வருடங்களாக பிரித்து வைத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சிறுகதையின் தலைப்பு சொற்கங்கு. சுடுசொல் அல்லது கடுஞ்சொல் என்று இல்லாமல் புதுவிதமாக சொற்கங்கு என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார் எழுத்தாளர்.
என்னை பாதித்த மற்றொரு சிறுகதை கரகம். ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த இச்சிறுகதையைப் படித்த அல்லது இந்தப் புத்தகத்தை படித்த சிலராவது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தனது ஊரிலோ அல்லது தன் அருகிலோ நடக்கக்கூடாது என்று விரும்பினால் அது இந்த சிறுகதையின் வெற்றி என்றே கூறலாம். இதை படித்து முடித்த பின் சற்று நேரம் மனம் கணக்கத்தான் செய்தது.
மைக்கண் வானம் - இதுவரை நான் தமிழில் அறிந்திடாத, கேட்டிராத ஒரு வார்த்தை மைக்கண். கதையானது இரண்டு குமரிப் பிள்ளைகளோடு இருக்கும் ஒரு ஏழை பெண் பற்றியது. மனிதர்கள் மதம் சார்ந்து ஒன்றிணைந்தாலும் அங்கும் அவர்கள் பணக்காரன் ஏழை என்றே இரு பிரிவாக பிரிவார்கள். பணக்காரர்கள் எப்போதும் தான் வசதியாக வாழ வேண்டும் அதற்காக அவர்கள் ஏழைகளிடம் சில நேரங்களில் எந்த அளவுக்கும் இறங்கி போவார்கள். தன் காரியங்கள் முடிந்து விட்டால் அதே ஏழைகளிடம் அவர்கள் எந்த அளவுக்கு நடந்து கொள்வார்கள் என்பது இந்த கதையின் போக்கு ஒரு சிறந்த உதாரணம். ஒரு மேட்டுக்குடும்பம் மற்றும் ஒரு ஏழைப் பெண் இவர்களுக்கு இடையே நடைபெறும் வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு பகுதியே இச்சிறுகதை.
புத்தகத்தின் ஓரிடத்தில் புது வார்த்தையாக "தூரஇயக்கி" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பார். ஒரு இனத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் எழுத்தாளனின் வழியே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. எம்.எம்.தீன் அவர்கள் புதிய வார்த்தைகளையும் புதிய கதைக்களங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்.