மாயக்கண்ணாடி - உதயசங்கர்
உதயசங்கர் அவர்கள் எழுதியுள்ள மாயக்கண்ணாடி எனும் நூல் 13 சிறுகதைகளைக் கொண்டது. 11 சிறுகதைகளும் கற்பனையான 11 நாட்டையும், அந்த நாட்டின் அரசையும் பற்றியது. இந்த 11 சிறுகதைகளின் உள்ளடக்கம், ஒவ்வொரு நாட்டு அரசர்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நகைச்சுவையாக குழந்தைகளுக்கு சொல்லி உள்ளார்.
இன்றும், என்றும் சில முட்டாள்தனமான முடிவுகள் அதிகாரம், அதிகார பலம் கொண்டு வரலாம் மட்டுமே கொண்டவர்களால் மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்த முட்டாள்தனமான முடிவுகள் மக்களுக்கு நன்மை பயப்பதாக நம்ப வைக்கப்படுகிறது ஆனால் அப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவுகள் எப்போதும் எளியவர்களையும், அப்பாவிகளையும் பதம் பார்க்கின்றன. இக்கதைகளும் அதையே பிரதிபலிக்கிறது.
தனக்கு இதனால் பாதகம் என்று நினைத்து அதிகாரம் கொண்டவர்கள் ஒரு செயலை தடுக்கின்றனர். ஆனால் மீண்டும் தனக்கு அதை தேவைப்படும் பொழுது தங்கள் முடிவை மாற்றி கொள்கின்றனர். இதற்கிடையில் சாதாரண மனிதர்கள் இதனால் அதிகமாகவே பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தான் அதிகாரம் கொண்டவர்களை கோமாளி ஆக்கி தனது கதைகளில் நடமாட விடுகிறார்.
இந்த சிறுகதைகள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு தெளிவான எழுத்துக்களுடனும் ஒவ்வொரு சிறுகதைகளுக்கு ஓவியர்ர் பிள்ளை அவர்களின் ஓவியங்களுடனும் வெளிவந்துள்ளது. சிறுவர்கள் சற்று மெனக்கிட்டால் அந்த ஓவியங்களையும் வரைந்து கூட பார்க்கலாம். மேலும் அட்டைப்படம் சிறு கண்ணாடியுடன் சிறுவர்களை வாங்கத் துடிக்கும் அளவுக்கு வந்துள்ளது சிறப்பு.