கதவு - கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன் அவர்களின் சிறுகதைகள் அகரம் வெளியீடாக கதவு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தில் மொத்தம் 10 சிறுகதைகள் உள்ளன.
அவை, கதவு, குடும்பத்தில் ஒரு நபர், மின்னல், ஜெயில், சாவு, மாயமான், எழுத மறந்த கதை, கோமதி, கரண்டு, பலாப்பழம் ஆகியன.
மூன்று வருடமாக மழை தண்ணி இல்லாமல் இருக்கும் கிராமத்தில் ரங்கம்மா தன் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள். கணவன் வேலை தேடி வெளியூர் செல்ல அவள் காட்டிலே போய் கூலி வேலை செய்து 3 குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறாள். அந்த குழந்தைகளுக்கு ஒரே பொழுதுபோக்கு வீட்டில் உள்ள கதவு மட்டுமே. மற்ற குழந்தைகளுடன் அவர்கள் அதில் ஏறி ஆடிப்பாடி மகிழ்ச்சியடைகிறார்கள். இந்நிலையில் அந்த வீட்டின் தீர்வை பாக்கிற்காக தலையாரி ஆட்களுடன் வந்து அந்த வீட்டின் கதவை கழற்றி தூக்கி சென்று விடுகிறார். வீட்டில் கதவு இல்லாததால் கார்த்திகை மாத காற்று, விஷக் காற்றைப் போல் வீட்டினில் வந்து கை குழந்தையின் உயிரை விட்டு சென்று விட்டது.
ஒரு நாள் ரங்கம்மாவின் மகன் சீனிவாசன் பள்ளி சென்று விட்டு வரும் வழியில் அவர்கள் வீட்டு கதவு பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில் சாவடியில் இருக்கிறது என்று தன் அக்காவிடம் வந்து சொல்கிறான். இருவரும் ஓடிச் சென்று பார்க்கிறார்கள். யாருக்கும் பயனில்லாமல் கரையான் பற்றி இருந்த அந்த கதவை தன் பாவாடையால் தட்டி துடைத்து கதவில் தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டு தன் தம்பியுடன் சேர்ந்து அதை கட்டிப்பிடித்து கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட அதனை முத்தமிட்டு சிரிப்பதாக கதையை எழுதியிருப்பார் இராஜநாராயணன். இக்கதை தாமரை இதழில் ஜனவரி 1959 இல் வெளிவந்த சிறுகதையாகும்.
அடுத்து மாயமான் எனும் சிறுகதை(சரஸ்வதி நவம்பர் 1958). இச்சிறுகதையும் ஒரு விவசாயியைப் பற்றியே பேசுகிறது. அப்பாவு செட்டியார் ஊரில் கடையும் புஞ்சை நிலத்தையும் வைத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அரசு இனமாக கிணறு வெட்ட 400 ரூபாயை தருவதால் நாமும் நிலத்தில் ஒரு கிணறு வெட்டினால் நல்லது என்ற தந்தையுடன் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கிணறு வெட்ட ஆரம்பித்த செட்டியாருக்கு பணம் மேலும் தேவைப்படவே நிலத்தையும் கிணற்றையும் நாயக்கர் ஒருவரிடம் அடமானம் வைக்கிறார். இனாமாக பணம் வாங்கி கிணறு வெட்டியவர்கள் மூன்று வருடத்திற்கு பணப் பயிர்கள் சாகுபடி செய்யக்கூடாது என்று சர்க்கார் அதிகாரிகள் சொன்னதாலும், மழை பொழியாததாலும் அவர்களின் நிலைமை மேலும் மோசமாகியது. இறுதியில் மற்றவர்களைப் போலவே செட்டியாரும் வீட்டையும், நிலத்தையும் நாயக்கருக்கு தாரை வார்த்துவிட்டு பஞ்சம் பிழைக்க தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறுகிறார்.
இதே போல் மற்றொரு சிறுகதை. ராமசாமி நாயக்கர் என்னும் விவசாயி நிம்மதியாக பூவரசு மரத்தின் நிழலில் சுகமாக கமலை வண்டியின் ஒலி ஏற்ற இறக்கங்களுக்கு இசைய வடத்தின்மேல் ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு தண்ணீர் இறைத்து நாட்டுப் பாடல்களை வாய் விட்டுப் பாடி ஆனந்தமாக விவசாயம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் பம்புசெட் ரூம் நிறுவி அதன் மூலம் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். பம்புசெட் போட்ட பிறகு மாதமாதம் பில்லும், அதை கட்ட செல்லும் போது அதிகாரிகளின் செயல்பாடுகள், அவ்வப்போது கரண்ட் ஷிப்ட் முறையில் வருவதால் அவர் எதிர் கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றைக் கூறுகிறது கரண்டு எனும் சிறுகதை (சாந்தி ஏப்ரல் 1962).
இக்கதைகள் அரசு அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் மனிதாபமற்று ஏழைகளுக்கு கொடுக்கும் தண்டனைகள், இன்னல்களைக் கூறுகிறது. மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மனிதாபிமானம் இல்லாமல் இயந்திரத்தனமாக மற்றவர்களை வஞ்சிப்பது, மேலிடத்து ஆர்டர் என்று சப்பைக்கட்டு கட்டுவது ஆகியவை மட்டுமே.
குடும்பத்தில் ஒரு நபர் என்ற சிறுகதை(சாந்தி ஏப்ரல் 1963), தொட்டணன் என்ற கரிசல் காட்டு விவசாயி தனது மனைவி அயிரக்கா, பிள்ளைகள் மற்றும் அயிரக்கா சீதனமாக கொண்டு வந்த புல்லை என்ற காளையுடன் வாழ்ந்து வருகிறான். தொட்டணன் அவனுடைய புஞ்சை நிலத்தை கூட்டு மாட்டக்காரன் உடன் சேர்ந்து உழுதுவிட்டான். இப்போது கூட்டு மாட்டுக்காரன் நிலத்தை இவனுடைய மாட்டுடன் சேர்த்து உழ வேண்டியது தான் பாக்கி. இந்நிலையில் அவனுடைய மாடு மற்ற மாடுகளைப் போல காணைநோயால் பாதிக்கப்படுகிறது. கிராம மக்களில் சிலர் கடவுள் நம்பிக்கையை விட்டு விட்டு கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதை கேலி செய்து பேசி சிரிக்கிறார்கள். விரைவில் அவனுடைய மாடு மோசமான நிலையை எட்டுகிறது. இப்போது கூட்டு மாட்டுக்காரனுக்கு அவனுடைய மாடு தேவை. எனவே தன் மாட்டை எப்படியாவது காப்பாற்றி விடுவது என்று தொட்டணன் கோவில்பட்டி போய் டாக்டரை அழைப்பது என முடிவு செய்கிறான். தொட்டணும், டாக்டரும் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டின் வாசலை மிதிப்பதற்கும் வீட்டிலிருந்து அழுகைச் சத்தம் கேட்பதற்கும் சரியாக இருக்கிறது. துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் என் பிள்ளைகளில் ஒன்று இறந்திருந்தால் கூட நான் இவ்வளவு மலைக்க மாட்டேனே, எனக்கு என்ன செய்கிறதெண்ணு தெரியலையே என்று அவனுடைய ஆசைக்கோட்டைகள், கனவுகள் எல்லாம் தகர்ந்து தரைமட்டமாகிவிட்டதை நினைத்து குமுறுகிறான். சில நாட்களுக்குப் பிறகு கூட்டு மாட்டுக்காரன் வந்து நிற்கிறான் அவன் வீட்டின் முன்பு. மெதுவாய் மௌனமாய் எழுந்து யாருடனும் பேசாமல் நுகக்காலை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு அவன் பின்னாலே தலையைக் கவிழ்ந்து கொண்டே செல்கிறான் என்ன முடிகிறது இச்சிறுகதை.
மின்னல் என்ற சிறுகதை, பேருந்தில் பயணம் செய்யும் பிரயாணிகளை பற்றி சொல்கிறது. கி.ரா. பிரயாணிகளை பற்றி ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் "தூங்கிக் கொண்டிருந்த பிரயாணிகள் எல்லோரும் தங்கள் தலைகளை உடம்போடு ஓர் அசைப்பு அசைத்து மெதுவாகக் கண்களைத் திறந்தும் திறக்க இஷ்டப்படாமலும் இருந்தார்கள் என்று. ஒரு நிறுத்தத்தில் கிராம பெண்ணொருத்தி கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறுகிறாள். அதைப் பார்த்தவுடன் பஸ்ஸில் அமர்ந்திருந்த ஒவ்வொருவருடைய மனநிலையும் முற்றிலும் மாறுகிறது. இக்கதையில் மனிதர்களுடைய மனங்களையும் சூழ்நிலைகளைப் பற்றியும் கி.ரா எழுதுகிறார்.
மசக்கை சமயத்தில் விரும்பிய உணவுப் பொருள் கிடைக்காததால் சங்கரம்மாளுக்கு பிறக்கும் குழந்தைக்கு காதில் சீழ் வருகிறது இதைப்பற்றி கூறுகிறது பலாப்பழம் என்னும் சிறுகதை.