தமிழகத்தில் முஸ்லீம்கள்
வரலாற்று ஆய்வாளர் எஸ்.எம்.கமால் அவர்களின் "தமிழகமும் முஸ்லிம்களும்" நூலின் புதிய பதிப்பாக 25 கட்டுரை கொண்டு "தமிழகத்தில் முஸ்லிம்கள்" என்று வந்துள்ளது. இப் புத்தகத்திற்கு பக்தவத்சல பாரதி அவர்கள் 6 பக்கங்களுக்கு நீண்ட அறிமுகத்தை புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளார்.
புத்தகத்தின் முதல் அத்தியாயமாக "கிழக்கும் மேற்கும்" எனத் தொடங்கி இறுதி அத்தியாயமாக "வரலாறு தொடர்கிறது" வரை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பல்வேறு குறிப்புகளையும் சான்றுகளையும் தமிழ், ஆங்கில நூல்களையும் கொடுத்துள்ளார். தமிழக இஸ்லாமியர்கள் துலுக்கர், சோனகர், இராவுத்தர், மரைக்காயர், லெப்பை என வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதை ஒவ்வொரு அத்தியாயமாக இந்த பெயர் வந்த காரணத்தையும் அவர்களின் வாழ்விடங்களையும் தெளிவாக கூறியுள்ளார்.
மன்னராட்சிக் காலங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு அவர்களுடன் ஒத்துழைத்து வாழ்ந்தனர் என்றும் மன்னாராட்சி முடிந்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் வாழ்நிலையை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்கிறார்.
இஸ்லாமியர்கள் தமிழகத்தில் வணிகத்திலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியது மற்றும் கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் வாழ்ந்து கடல் முழுவதும் ஆட்சி செய்தது பின்னர் பரங்கியர்கள் வருகைக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கமால் அவர்கள் விரிவாக பதிவு செய்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் எவ்வாறு முஸ்லிம்கள் தோன்றினர் அல்லது வந்தடைந்தனர் என்பதைப் பற்றி தெளிவாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தமிழக முஸ்லீம்கள் தங்களைப் பற்றியும் தன் வாழ்விலும் பற்றியும் அறிய மிகச்சிறந்த நூல் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.