மீன்காரத் தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா
இந்நாவலின் மையக் கருத்து பிடிப்படவில்லை. நாவலின் தொடர்ச்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. படிப்பதில் சுவாரஸ்ய குறைவு ஏற்படுகிறது. ஆசிரியர் சொல்வது போல் இன்னும் அனேக இடங்களில், தெருக்களில் இஸ்லாமிய சமூகத்தில் பிரிவினைகள் இருக்கின்றன. ஆனால் அது வீட்டினுள் நுழையாமல் இருந்தால் சரி.
இதில் வரும் சில கதாபாத்திரங்கள், உயிர் இருக்கும் உடலை மட்டுமல்ல; உயிர் இருக்கும் மனத்தையும் புண்படுத்தியிருக்கிறது. இந்நாவலை படித்த பிறகாவது சிலர் உணரட்டும். "உடலும் உயிரும் அனைவருக்கும் ஒன்றே; அதில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை" என்பதை இந்நாவலில் அனைவரின் வாழ்க்கையை உள்ளடக்கிய மீன்காரத் தெருவின் முடிவு முற்று பெற்றதாகத் தோன்றவில்லை.