பிறகு - பூமணி
இந்நாவலில் குறிப்பிடப்படும் பெயர்கள், ஊர்கள், பேசும் மொழிகள் என அனைத்தும் கிராமப்புற வாழ்விற்கு நம்மை இட்டுச் செல்வதாக இருக்கிறது. இடையிடையே பேசப்படும் தெலுங்கு புரியவில்லை. ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தம் புத்தகத்தின் பிற்பகுதியில் குறிப்பிட்டுருப்பதை விட, படிக்கும் பக்கத்தின் கீழே குறிப்பிட்டு இருந்தால் படிப்பதில் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
ஆரம்பத்தில் படிக்க கடினமாக இருந்த இந்நாவல் படிக்க படிக்க ஆவலாக மாறியது. பலவித சண்டைகள் இருந்தாலும் கிராம மக்களின் நேர்மை, அன்பு, இரக்கம், கருணை அனைத்தும் நியாயமானதாகவும், தர்மமாகவும் இருப்பதை இந்நாவல் காட்டுகிறது.
அழகிரி, கந்தையா கதாபாத்திரங்கள் பிடித்தமானதாக இருந்தது. அகத்தின் அழகை விட்டு புறத்தின் அழகை மட்டுமே ரசிக்கும் சில மனிதர்களினால் முத்துமாரியின் வாழ்க்கை மரணம் வரை முடிந்தது கல்மனத்தையும் கரைக்கக் கூடியதாக இருந்தது.
கதையின் தொடர்ச்சி, சொல்லப்பட்ட கருத்துக்கள், நிறைவடைந்த விதம் அனைத்தும் அற்புதமாக இருந்தது.