என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில்நாடன்

என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில்நாடன்

இந்நாவலில் பேசப்படும் மொழிகளும், பேச்சு வழக்கும் கள்ளங்கபடமற்ற கிராமத்து மக்களின் வாழ்வை நினைவு கூறுகிறது.

வீடு, ஆறு, சாலை என அதன் இயல்பை, அழகை, வர்ணிப்பது; கிராம மக்களின் பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் கூறுவது, முன்பின் பார்த்தும் கேட்டும் அறிந்திராத மக்களுக்கு நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பருவம் அறிந்து செயல்படும் முதுமையின் அனுபவம், வறுமையிலும் படிப்பை மேற்கொள்ளும் கிராம மக்களின் முன்னேற்றம், எண்ணெய் குளியல், சத்தான உணவு என கிராமத்து மண் வாசனையை உணர முடிகிறது.

மூடநம்பிக்கை, திருவிழா, மக்களின் அறியாமை, சொந்தங்களின் பின்வாங்கல் இவை அனைத்தும் படித்தும், கேட்டும், உணர்வும் முடிந்த விஷயங்களாதலால் இவை அவ்வளவாக கவரப்படவில்லை.

கல்லெறியும் போது
கலங்கும் குளம்
வசை மொழிகளாலும்
தேவையற்ற பேச்சாளும்
கலங்கும் மனம்
இரண்டும் அழகானது
மற்றவர் நுழையும் வரை...!

இதேபோல் சுடலையாண்டியின் மனமும் கல்லெரிந்த குளம் போல் குழம்பி இருப்பது போன்ற முடிவை காட்டுவது ஏமாற்றத்தை அளிக்கிறது.

 

No of users in online: 209