அக்பர் - சி.எஸ்.தேவநாதன்

அக்பர் - சி.எஸ்.தேவநாதன்

இப்புத்தகம் ஒரு சரித்திர நாயகனின் பெயரையும், அந்நாயகனின் வாழ்க்கை வரலாற்றையும் தன்னகத்தை கொண்டுள்ளது. ஒரு விதமான சொத்து புத்துணர்ச்சியுடன் இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அதைவிட, என்னுள் உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கினேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இதன் தொடர்ச்சி பாபரின் வரலாற்றையும் அவரின் போர் திறமையையும் கொண்டு இருக்கிறது. சொல்லப்போனால் புத்தகம் முழுவதுமே போரைக் கொண்டே முடிந்திருக்கிறது. அதனால் வாசிப்பதில் சுவராஸ்யம் குறைவாக இருக்கிறது.

ஹுமாயூனின் ஆட்சித் திறமையும், போர் முறையும் தொடக்க காலத்தில் மாறுபட்டதாக இருந்தாலும், பிற்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்திற்கு உந்துகோலாக அமைந்திருக்கிறது.

அக்பரின் ஆட்சி முறை முன்னோர்களை ஒத்து இருந்தாலும், பின்பு சுயமாக சிந்தித்து சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், பாலியல் திருமணம், அதிக வரதட்சணை என்பன போன்ற சமுதாய சீர் உடலை எதிர்த்து நின்றது.

அக்பரின் மனிதநேயத்தையும், மக்களின் மேல் அவருக்கு இருந்த பாசப்பிணைப்பையும் காட்டுகிறது. இப்புத்தகத்தில் அக்பர் எழுத, படிக்கத் தெரியாதவர் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி இருப்பது பெரும் குறை.


கேள்வி ஞானத்தில் சிறந்தவர்
மனித நேயத்தின் பண்பாளர்
கட்டிடக் கலையின் ஆர்வலர்
மக்கள் மனதின் பங்காளர்
சாதி, சமய, இன வேறுபாடு காட்டாதவர்
உழைப்பதில் தளராதவர்
அனைத்தையும் கற்றுக்கொள்ள முனைபவர்
ஆளுமைத் திறனில் வல்லவர்

என அக்பரின் பெருமைகளை உணர்த்தி அவரின் ஆட்சிக் காலம் முகலாய சாம்ராஜ்யத்தின் பொற்காலம் என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது இப்புத்தகம்.

எனினும் அக்பரின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றியது அவரின் மனைவி ஜோதாபாய். அவரைப்பற்றி அதிகம் கூறப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆயினும் இப்புத்தகம் வரலாற்று ஆசிரியர்களுக்கு சிறந்ததாக அமையும்.

No of users in online: 136