பார்ப்பனியச்  சூழ்ச்சியில் காந்தியார் படுகொலை
பார்ப்பனியச் சூழ்ச்சியில் காந்தியார் படுகொலை - இக்லாஸ் உசேன்

பார்ப்பனியச் சூழ்ச்சியில் காந்தியார் படுகொலை - இக்லாஸ் உசேன்

பார்ப்பனியச் சூழ்ச்சியில் காந்தியார் படுகொலை -   இந்த தலைப்பிற்காகவே இப்புத்தகத்தின் ஆசிரியர் இக்லாஸ் உசேன் அவர்களைப் பாராட்டலாம். ஏனெனில் இதற்கு முன் நான் படித்த மற்ற புத்தகங்கள் எல்லாம் இந்து, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்., கோட்சே, சாவர்க்கர் இவர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒரு புத்தகத்தின் தலைப்பு பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக காந்தியார் படுகொலைக்கு மூல காரணம் எது என்பதை தெளிவுபடுத்துகிறது.

புத்தகம் மொத்தம் 44 பக்கமே இருந்தாலும் மூன்று பகுதிகளாக இதனைப் பிரித்துள்ளார்.

1.காந்தியின் மத சமத்துவ முயற்சியில்! இந்துத்துவாவின் வளர்ச்சி....
2.புல் புல் சாவர்க்கர்.
3.இந்துத்துவா அரசியலுக்காக, பலியாக்கப்பட்ட காந்தியார்.

முதல் பகுதி, காந்தி யார்? காந்தி யாருக்கானவர்? அவருடைய அரசியல் எப்படி பாலகங்காதர திலகரிடமிருந்து தொடங்குகிறது என்பதை குறிப்பிட்டுள்ளார். பார்ப்பனர்களுக்கு உள்ளேயே மிக உயர்ந்தவர்கள் என்று கூறப்படும் மராத்தியத்தின் சித்பவன் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் திலகர். மராட்டிய பேரரசில் பேஷ்வாக்களாகவும், மன்னர்களாகவும் இருந்தவர்கள். அனைவருக்குமான கல்வி என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்த போது அதை கடுமையாக திலகர் எதிர்த்தார். ஆட்சிதான் இல்லை எஞ்சியிருக்கும் மேலாண்மையும் போய்விடக்கூடாது என்ற கவலை தான் அவரிடத்தில் இருந்தது என்று கூறி இந்திய அரசியலை இந்துமயமாக்குவதை வெளிப்படையாகவே செய்தவர் திலகர் என்றும் இந்துக்கள், முஸ்லிம்கள், பிற மதத்தினர் உற்சாகத்துடன் பங்கேற்று வந்த முகரம் பண்டிகைக்கு மாற்றாக கணேஷ் பூஜையை ஊக்குவித்தவர் என்று  கூறி திலகரின் உண்மையான சுய ரூபத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.

தன் பார்ப்பன மேலாதிக்கத்திற்காக போராடியவனை இந்திய அரசியலுக்காகப் போராடியவர் என்று சிறுவயதில் தமிழ்நாடு பாட புத்தகங்களில் படித்தது மிகப் பெரிய நகைமுரண்.

ஆங்கில அரசு சதி வழக்கில் திலகரை சிறையில் அடைத்த பொழுது காந்தியின் வருகையும் திலகரை ஓரம் கட்ட, காந்தி இந்திய அரசியலில்   நுழைகிறார்.

இப்பகுதியில் காந்தி மற்றும் இந்திய அரசியலை மூன்று காலகட்டமாக பிரித்துள்ளார்.
1920 - 1930 வரையிலான முதலாவது காலகட்டம்.
1930 - 1940 வரையிலான இரண்டாவது காலகட்டம்.
1040 - 1948 வரையிலான காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் வரை மூன்றாவது காலகட்டம்.

1920-1930 இல் காந்தி ஒரு சனாதானாவாதியாக இருந்ததையும் அதன் எதிரொலியாக காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதியை காந்தி சந்தித்த பொழுது அவரிடம் சங்கராச்சாரியார் நடந்து கொண்ட விதத்தை ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளார். இது பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு அருவருப்பாக நடந்து கொள்வார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில் காந்தியும் இதற்கு எவ்வாறு அடிபணிந்து நடந்தார் என்பதை இக்காலகட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

1920-1930 இல் காந்தி ஒரு சனாதானாவாதியாக இருந்ததையும் அதன் எதிரொலியாக காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதியை காந்தி சந்தித்த பொழுது அவரிடம் சங்கராச்சாரியார் நடந்து கொண்ட விதத்தை ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளார். இது பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு அருவருப்பாக நடந்து கொள்வார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில் காந்தியும் இதற்கு எவ்வாறு அடிபணிந்து நடந்தார் என்பதை இக்காலகட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

1930 - 40 காலகட்டத்தில் காந்தியின் பார்வையை அவர் சனாதனியாகவோ அல்லது முற்போக்கான இருந்ததை எதையும் சுட்டிக்காட்டவில்லை ஆசிரியர் அவர்கள்.

ஆனால் 1948 வரையிலான காந்தியை ஒரு முற்போக்கு வாதியாக இருந்ததை அவருடைய பல பேச்சுகள் மூலம் சுட்டிக்காட்டி உள்ளார். உதாரணமாக, மாட்டிறைச்சி உண்பது இழிவானது அல்ல என்றும் அரசு வேலைவாய்ப்பில் பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற சாந்தியாரிடம் பார்ப்பனர்கள் கோரிக்கை வைத்த போது உங்கள் பிறவிப் பணி கோவிலில் பூஜை செய்வது தானே உங்களுக்கு எதற்கு அரசு வேலை என்று கேட்டதையும், பிரபாகர் என்ற தலித்தை புரோகிதராக தலைமையேற்று ஒரு திருமணத்தை நடத்தி வைக்க சொல்லியதையும்,  ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் நீங்கள் யோக்கியர்கள் என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது என கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமாக இந்த மனமாற்றத்திற்கு, முற்போக்குவாத நடவடிக்கைக்கு அம்பேத்கரும் பெரியாரும் காரணமாக இருந்திருப்பார்கள் என்பதே உண்மையாக இருந்திருக்கும்.

புல் புல் என்ற பகுதி மன்னிப்பு கடிதத்தையும் ஒருவன் பிறப்பின் அடிப்படையில் அல்லது நிலத்தின் அடிப்படையில் அல்லது மொழியின் அடிப்படையில் அல்லது பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்ற வரையறையை முற்றிலுமாக தவித்துவிட்டு உனது மதத்தின் புனித தலைமையகம் எங்கு இருக்கிறதோ அதை வைத்து நீ இந்த மண்ணின் மைந்தன் என்றும் அல்லது அண்ணன் என்கிற கோட்பாட்டியை சாவர்க்கர் உருவாக்கியது சுட்டிக்காட்டி உள்ளார்.

கட்டுரையின் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் இக்லாஸ் உசேன்.

"காந்தியார் படுகொலை இந்தியாவின் நலனுக்காகவோ இந்து மக்களின் நலனுக்காகவோ அரங்கேற்றப்பட்டது இல்லை.
பார்ப்பனிய நலனுக்காக அதன் அதிகாரத்துவத்துக்கு எந்த வகையிலும் சிறு எதிர்ப்பு நிலையும் எழுவதைச் சகித்துக் கொள்ளமாட்டோம் என்பதற்கான செயல்திட்டம் வெற்றியாக்கப்பட்ட நிகழ்வே காந்தியார் படுகொலை."

இது முற்றிலும் உண்மை. இந்த உண்மையை இந்திய மக்கள் மட்டும் அல்ல; தமிழக மக்களின் ஒரு சாரார் தெரிந்து கொள்ளவில்லை; தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.