இதோ உதவி! - காப்மேயர்

இதோ உதவி! - காப்மேயர்

மிகவும் பயனுள்ள புத்தகம், பொக்கிஷம். இதில் 93  தலைப்புகளில் வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் 2 அல்லது 3 பக்கங்களுக்கு மிகாமல் உள்ளது மிக  சிறப்பு.  படிப்பதற்கு மிகவும் எளிதாக உள்ளது.

எண்ணங்கள், மனக்காட்சி,கற்பனை,பிரச்சனை, பிரச்சனை மனிதர்கள்,அமைதி, உணர்ச்சிகள், கோபம், கவலை, வெற்றி, நேரமின்மை , அறிவு , விமர்சனம், அனுதாபம், பொறுமை, செயல், மறுப்பு, காலம், தவறு, பணம், மனிதர்கள், சிந்தனை, அவசரம், எதிர்ப்பு, உள் ஒளி  பற்றிய வெவ்வேறு தலைப்புகளில் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள விஷயங்கள் அழகாக இடம் பெற்றுள்ளது.

மன காமிரா மூலம் 100 கணக்கான வெற்றிகளை படம் பிடிக்க சொல்ல பட்டிருக்கிறது. இதன் மூலம் நமது ஆழ் மனது வெற்றி பெற தூண்ட படுகிறது. அமைதியாக இருங்கள் என்ற பக்கம் மிகவும் சூப்பர். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய மிக முக்கியமான பக்கம்.

அமைதியான மனம் இருந்தால் யாரும் எதுவும் உங்களுக்கு தொல்லை தர முடியாது.

கோபம் பற்றிய கருத்துக்கள்  மிக சிறப்பு. கோபம் விஷம் குடிப்பது போன்றது. வருத்தம் கோபத்தை உண்டாக்குகிறது , கோபம் வெறுப்பை கிளறுகிறது, வெறுப்பு விரோதமாக மாறுகிறது, விரோதம் பகையாகி விடுகிறது.கோபம் மற்றவர்களை விட உங்களை தான் அதிகம் பாதிக்கிறது. கோபத்தினால் மற்றவர்களை கிண்டல் செய்யலாம். அது கொடூரமானது .கோபப்படுவதால், மனம் வலு இழந்து சிடுசிடுப்பும்,  ஆற்றாமையும் அதிகரிக்கும். தாமதம் கோபத்திற்கு சிறந்த மருந்து. இனிமையான சொற்கள் நன்மை பயக்கின்றன. துடிக்கும் வார்த்தைகள் சினத்தை சேகரித்து வைக்கின்றன.

எதிரியை வெல்வதை விட அவனை புரிந்து கொள்வதே மேல். எதிரியை தோற்க செய்தால் அவன் மீண்டும் மீண்டும் எழுந்து தொல்லை கொடுக்க கூடும். ஆனால் அவனோடு சமாதானம் செய்து கொண்டால் அவன் தலை எடுக்கவே மாட்டான்.

எவ்வாறு மனிதர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு அருமையான வழிகாட்டி. அமைதி , பொறுமை கருத்துக்கள் மிக சிறப்பு. அமைதியாக இருப்பது புயலின் கண்ணுக்கு ஒப்பாகும் - சுற்றி புயல். வாழ்க்கையே அது மாதிரி தான். உள் அமைதி மிக முக்கியம். பகை உணர்ச்சி மிகுந்தவர்கள் உங்களை உரசி கோபிக்க வைத்தாலும் அமைதியாக இருங்கள்.

எப்போதும் இனிமையாக பதில் சொல்ல கற்று கொள்ளுங்கள்.
கடுமையான சொற்களை உபயோகிக்காதீர்கள்.
கோபத்துக்கு அடிமையாகி பதில் கூறாதீர்கள்.
வேகமாக முடிவு எடுத்து செயல் படாதீர்கள்.

பொறுமையின் வலிமை அழகாக எடுத்து சொல்ல பட்டிருக்கிறது. யோசிக்காமல் வேலை செய்வதன் விளைவுகள் எடுத்து சொல்ல பட்டிருக்கிறது. எதையும் உடனே செய்யாதீர் என்ற கருத்து  சூப்பர். ஆழ்மனதின் சக்தியை பற்றியும் குறிப்பிட பட்டுள்ளது. நேர்மறை எண்ணங்களின் வலிமை அழகாக எடுத்து சொல்ல பட்டுள்ளது. பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய அவசியம் வலியுறுத்த பட்டிருக்கிறது . பிரச்சனையை தீர்க்க விட்டால், பிரச்சனை மனிதர்கள் நம்மை கட்டுக்குள் வைப்பார்கள்.

மன அமைதி பெற அதிகமாக வாதம் செய்ய வேண்டாம். பழைய நிகழ்ச்சிகளை கிளறி வருத்தப்பட வேண்டாம். அறிவை  பெருக்குவதன் முக்கியத்துவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. விமர்சனங்களை எப்படி கை ஆள்வது என்று அழகாக சொல்ல பட்டிருக்கிறது. மொத்தத்தில் மிக மிக பயனுள்ள ஒரு இன்றியமையாத புத்தகம்.

இப்புத்தகத்தை படித்தவர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெரிய பாக்கியவான்கள். படிக்காதவர்கள் மிகப்பெரிய இழப்பாளிகள்.

No of users in online: 88