நரிப்பல் - இறையன்பு
எழுத்தாளரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரியாக இருந்த வெ.இறையன்பு அவர்கள் பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். அவற்றில் அவர் எழுதிய நரிப்பல் என்ற இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 15 சிறுகதைகளைக் கொண்டது.
அரசின் பல்வேறு அடுக்குகளில் பணிபுரிந்து அனுபவம் கொண்ட வெ.இறையன்பு அவர்கள் அங்கு பார்த்த நிகழ்வுகளை சிறுகதைகளாக எழுதியுள்ளார் என்பதை இக்கதைகள் மூலம் நான் தெரிந்து கொள்கிறேன்.
மொத்தம் உள்ள இந்த 15 சிறுகதைகளில் ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு விதம். சில சிறுகதைகள் எளிய மக்களின் நிலையையும் வாழ்க்கை நிலையையும் குறிக்கிறது.
உதாரணமாக இரங்கல், மரண தண்டனை, விசுவாசிகள், நரிப்பல், டுலேட் போன்ற சிறுகதைகள் எளிய மனிதர்களை எப்படி இசசமூகம் காவு வாங்குகிறது என்பதை குறிப்பிடுகிறது.
முதல் சிறுகதை இரங்கல். இதில் வரும் எளிய மனிதன் நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் முனியாண்டி. பொதுப்புத்தியில் இந்த பெயரை இச்சமூகம் கேட்டாலே அவனுடைய வேலை என்ன? நிலைமை என்ன என்பது தெரிந்து கொள்ளும்.
விசுவாசிகள் என்ற சிறுகதை கலியபெருமாள் என்ற ஒரு கீழ் மட்டத்தில் உள்ள ஒரு அரசியல்வாதி பற்றிச் சொல்கிறது. எந்த ஒரு அரசியல்வாதியின் போராட்டமாக இருப்பினும் அப்போராட்டம் தன் நலன் சார்ந்தும் இருக்கும் வகையில் அந்த அரசியல்வாதிகள் போராடுவர். ஆட்சியாளர் சொல்வது போல் இறையன்பு அவர்கள் ஓர் இடத்தில் கூறியிருப்பார். "இவர்களை நம்பி சகல நேரமும், சப்தநாடியும் ஒடுங்கி, இவர்கள் சொல்லே வேதமா வாழும் மக்களை எண்ணி பரிதாபப்பட்டேன்" என்று.
இந்த கதையின் மூலம் அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகளின் குணத்தையும் சுட்டி காட்டி இருப்பார். அதே நேரத்தில் இரங்கல், விசுவாசிகள் மற்றும் சாய்ந்த கோபுரம் சிறுகதைகள் அரசு அலுவலகங்களிலும் அறத்தோடு வேலை பார்க்கிற, உதவி செய்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நரிப்பல் என்ற சிறுகதை பாசிமணி மற்றும் ஊசி வியாபாரம் செய்யும் பழநி என்ற ஒரு நரிக்குறவ மனிதனைப் பற்றி கூறுகிறது. இச்சமூகம் ஒரு நரிக்குறவ மனிதனையும் எப்படி மடை மாற்றுகிறது என்பதையும் அதனால் தான் செய்த தவறுக்காக தன் சமூகத்திற்குப் பயந்து தற்கொலை செய்வதையும் சுட்டி காட்டுகிறது.
டுலெட் என்ற சிறுகதை குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு எளிய தம்பதியர் ஆசைப்பட்டு கட்டிய வீட்டை ஒரு வலிய மனிதன் எப்படி தனதாக்கிக் கொள்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
செருப்பு விருப்பங்கள் என்ற சிறுகதை ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதும் எந்த வேலையும் சரியானது என்பதும் அதை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இச்சிறுகதைத் தொகுப்பில் மிகவும் பிடித்த சிறுகதை துப்டன் டெம்பா(புத்தருடைய சீடர் என்று பொருள்). இச்சிறுகதை வடமாநிலத்தில் இருக்கும் குறிப்பிட்ட சிலரைப் பற்றிய நமது பார்வையை சற்று விசாலப்படுத்தும். ஒரு குடும்பத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதும், ஒரு நாட்டில் சிறுபான்மையினர் அடிமைப்படுத்தப்படுவதும் காலம் காலமாக நடக்கக்கூடிய விஷயங்கள். அது போலவே வடமாநிலத்தில் இருக்கும் மலைவாசிகளும். பள்ளிப் பாட புத்தகங்களில் நாம் படித்த "மங்கோலாய்ட்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வரும் பொழுது சற்று மனம் கலங்குகிறது. எப்படி ஒரு கூட்டத்தார் இப்படிப்பட்ட பெயர்களை சூட்டி மக்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரிய வரும் பொழுதும் அதனை மாற்றாமல் அதை அப்படியே நாம் தொடர்ந்து கொண்டு வருவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் கூட.
இச்சிறுகதைகள் ஆசிரியர் தனது வாழ்வில் கண்டு கேட்டு உணர்ந்த நிகழ்வுகளை கதைகளாக படைத்துள்ளார் என்று நாம் கூறலாம்.