தமிழ் அழகியல் - இந்திரன்
கவிஞர் அறிவுமதியின் "மண்" இதழ் உட்பட பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளை "தமிழ் அழகியல்" என்ற புத்தகமாக இந்திரன் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இப்புத்தகம் ஐந்து பகுதிகளுடன் 36 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
இப்புத்தகத்தின் நோக்கம் தமிழர்களுக்கென்று தனித்துவமான ஓர் அழகியல் இருக்கிறது என்பதே. மேலும் தமிழ் அழகியல் என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து பேசுகிறார். முதல் பகுதி கலை, வண்ணம், குறியீடு, கோடுகள் பற்றியும் இரண்டாவது பகுதி தமிழ் அழகியல் ஏன்? எதற்காக? யாருக்காக? என்பதன் பற்றியும் மூன்றாவது பகுதி தமிழகத்தில் இருக்கும் சிலைகள் பற்றியும் (கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உட்பட) நான்காவது பகுதி அக்கலைக்கு உயிர் கொடுத்த/கொடுக்கும் சிற்பிகளை பற்றியும் அடுத்ததாக அழிந்து வரும் கலைகளை பற்றியும் எடுத்துரைக்கிறது.
முதல் கட்டுரை கலை பற்றியது. இக்கட்டுரையில், மனிதனுக்கு வாழ்க்கையில் முக்கிய பிரச்சினைகளான, "சாவைப் பற்றிய பயம் மற்றொன்று வாழ்வைப் பற்றிய பயம்" என இந்த இரண்டினை கலை தீர்த்து வைக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு கட்டுரையும் சில அழுத்தமான கேள்விகளையும் அதற்கான பதில்களையும் கொண்டிருக்கிறது. மேலும் நேற்றைய அழகியலுக்கும், இன்றைய அழகியலுக்கும் இடையே வேறுபாடு உண்டு என்று கூறும் இந்திரன் அவர்கள் அந்த வேறுபாட்டை நாம் வாழ்வில் தினந்தோறும் காணும் அனுபவத்தோடு ஒப்பிடுகிறார். மேலும் கோடு கலையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றும் கோடுகள் அதிர்வுகளை உண்டாக்குகின்றன என்று முன்னோர்கள் நம்பினார்கள் என்று கூறும் இந்திரன் அவர்கள் அதற்கான சில எடுத்துக்காட்டுகளை எளிமையாக விளக்குகிறார். மேலும் மற்றொரு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் தென் ஆற்காடு மாவட்டத்தில் அனந்தபுரம் எனும் ஊருக்குப் பக்கத்தில் கீழ்வாலை எனும் இடத்தில் உள்ள ரத்த குடைக்கல் எனும் குகையைச் சுட்டிக் காட்டுகிறார்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று முப்பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கும் நாம் சிற்பம், ஓவியம், கட்டடக்கலை ஆகியவற்றை எந்த தமிழின் கீழ் வகைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்ற வினாவினை எழுப்புகிறார்.
இயற்கையின் பொருள்கள் அனைத்தையும் வட்டம், சதுரம், முக்கோணம் ஆகிய மூன்று அடிப்படை ஜியோமிதி வடிவங்களுக்குள் கொண்டு வர முடியும் என்று ஒரு ஆச்சரியமான தகவலைத் தருகிறார்.
அதே நேரத்தில் இன்று தமிழன் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சனையாக அடையாள சிக்கலையும் வெளிப்படுத்துகிறார். அவற்றை, "உலகம் முழுமைக்கும் சொந்தமான உலக மனிதன் என்றும் தன்னைச் சுற்றி அன்றாடம் உறவாடும் சமூகத்துக்கும் அதன் பண்பாட்டுக்கும் உரிய தமிழன்" என்றும் அடையாளப்படுத்துகிறார். இந்த அடையாளங்கள் எவ்வாறு இன்றைய தொழில்நுட்பத்தில் தமிழனை கொண்டு வந்திருக்கிறது என்றும் தெரியப்படுத்துகிறார். மேலும் "தமிழர்களின் கலையில் இன, பண்பாட்டு அடையாளங்களைத் தேடுவது என்பது பிற்போக்கானது" என நினைக்கும் அல்லது வினா எழுப்பும் தமிழர்களுக்கு பாரீஸ் பல்கலைக்கழகத் தத்துவ பேராசிரியர் மைக்கேல் டப்ரேனின் மேற்கோளைச் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ்ச் சூழலில், "அழகியல்" என்பது தெரியாததற்கான காரணம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் ஆழமான பாதிப்பாகும் என சுட்டிக்காட்டும் இந்திரன் அவர்கள் காலணி ஆதிக்கத்திலிருந்து அரசியல் விடுதலை பெற்ற பிறகும் கூட மேலை நாட்டினரே நமது சிந்தனை எஜமானவர்களாகவும் அவர்கள் தனது பலமான தகவல் தொடர்புகளின் மூலமாகவும், அரசியல் பலத்தினாலும் தமது பண்பாட்டு விதைகளை நம்மிடையே விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இதனை தமிழர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்கவும் சில நேரங்களில் அது குறித்த வேதனையை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
தமிழில் "அழகியல்" என்பது இல்லையா? என்ற கேள்வி எழும் பொழுது ஒருமித்த குரலில் இல்லை என்று ஒரு வெறுமையான பதிலைப் பதிவு செய்வோம். ஆனால் தொல்காப்பியர் ஒரு அழகியல்வாதி என்பதை மலையாள கலை இலக்கியவாதி ஐயப்ப பணிக்கர் நமக்கு எடுத்துக்காட்டுவதை செவுளில் அறைந்தபடி சுட்டிக்காட்டுகிறார்.
அதே நேரத்தில் தமிழர் ஒருவர் சிற்பங்களை படைக்கும் பொழுது நமது கலை விமர்சகர்கள் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக அதனை விமர்சிக்கிறார்கள் என்றும் ஆதங்கப்படுகிறார்.
தமிழ் அழகியலைப் பற்றி பேசும் எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலை விமர்சகர் இந்திரன் அவர்கள் இந்த மண்ணின் படைப்புகளை மக்களுக்கு தரும் நவீன ஓவியர்களை பற்றியும் அவர்களின் பின்னணி பற்றியும் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக ஆதிமூலம்(கோடு) சந்ரு, மூக்கையா(சுடுமண் சிற்பங்கள்), பி.வி.ஜானகிராமன்(உலோக சிற்பங்கள்), எம்.கே.முத்துசாமி, வீர சந்தானம், ட்ராட்ஸ்கி மருது, பி.பெருமாள் மற்றும் இந்திரன் ஆகியோரின் ஓவியங்களையும் சாதனைகளையும் கொண்டாடுகிறார். அதே நேரத்தில் இவர்கள் பல பேர் எளிய குடும்பத்தில் இருந்து கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தன் மண் சார்ந்த மரபு சார்ந்த நாட்டுப்புற கலைப்படைப்புகளையும் தமிழர்களின் சிறப்பான கலைச் செல்வங்களையும் இந்த மண்ணின் சாரத்தோடு ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நவீன யுகத்தில் கலாச்சாரம், பண்பாடு மட்டுமல்ல கலையும் அழிந்து கொண்டு தான் வருகிறது. உதாரணமாக கிராமப்புறங்களில் பாட்டிகளின் காதுகளில் தொங்கும் 'தண்டட்டி' என்று கூறப்படும் பாம்படம், சிலம்பாட்டத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு நிலையான புலி ஆட்டம், மாரீதம், குகை ஓவியங்கள், செப்புத் திருமேனிகள் என பல்வேறு கலைச்சிற்பங்கள் அழிந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார்.
இப்புத்தகத்தில் நான் வியர்ந்த மற்றொரு விஷயம் தன் முன்னுரையில் இந்திரன் அவர்கள் Digital Age என்னும் வார்த்தைக்கு எண்மின் யுகம் என்று கூறியிருப்பார். இவ்வாறு கலையை மட்டுமல்ல தமிழையும் நவீன யுகத்தின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இந்திரன் அவர்கள் பாராட்டுக்குரியவர். மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால் ஈழத்து அறிஞர் டாக்டர் கார்த்திகேயன் சிவத்தம்பி இப்புத்தகம் தனது பார்வையையே மாற்றியது என்று குறிப்பிடுகிறார். அதோடு இப்புத்தகத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கவின் கலைத்துறையில் பாட நூலாகவும் வைத்துள்ளார் கார்த்திகேயன் சிவத்தம்பி அவர்கள்.
கலை விமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதுவதோடும் பேசுவதோடும் மட்டுமல்லாமல், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு - இத்தாலிய ஓவிய காலரியில் "செலக்ட்டிவ் ஆர்ட் காலரி" எனும் கலைக்கூடத்தில் 20 முக்கிய தமிழ்நாட்டு ஓவியர்களின் ஓவியங்களை கண்காட்சி வைத்ததும், சாகித்திய அகாடமி மற்றும் சேலம் பெரியார் கழகத்துடன் இணைந்து தமிழ் அழகியல் என்ற பொருளில் ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது என அவரின் செயல்பாட்டுக்கு மிகச் சிறப்பான உதாரணங்கள்.
கட்டுரையின் ஊடே இந்திரன் அவர்கள் பல்வேறு வினாக்களை தொடுக்கிறார். அவை,
1. சர்வதேசக் கலை என்பதின் பொருள் என்ன?
2. உலகப் பண்பாடு என்றால் என்ன? அதை நிர்மாணிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
3. மேலைநாட்டினர் நமது கலைப் படைப்புகளையும் சரியானது அல்ல என மதிப்பீடு செய்தார்களா?
4. ஆம் எனில் நாம் நமது கலைப்படைப்புகளை எந்த கோட்பாடுகளை வைத்து மதிப்பீடு செய்வது?
5. 'தமிழ் அழகியல்' என்ற ஒன்றை இன்றைக்கு நாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன?
இன்னும் வினாக்கள்! வினாக்கள்!! வினாக்கள்!!!. இந்த வினாக்களுக்கு இந்திரன் அவர்களே பதில் அளித்துள்ளார். நாம் செய்ய வேண்டியது இந்த தமிழின் கலையை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பது மட்டுமே.