என் வீடு கவிக்கூடு
என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

“தூசித் தட்ட நினைத்தேன்

என் சாளரத்தைத் திறந்தேனே

திறந்ததும் பறந்து சென்றது

உள்ளிருந்தது வெளியே 

வெளியிருந்தது உள்ளே” 

நாம் எத்தனையோ நூல்கள் எழுதினாலும் அதில் ஒரு சில படைப்புகள் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன. அப்படி நாம் எழுதிப் பழகும் பல கவிதைகள் நமக்கு அடையாளத்தை தேடிச் சேர்க்கின்றன.

தனது முதல் கவிதையிலேயே அப்படியானதொரு அடையாளக் கவிதையை பதிவு செய்துள்ளார் கவிஞர். 

என் அன்பு தம்பி  தே .செ . பிரகாஷ் எழுதிய “என் வீடு கவிக்கூடு”கவிதை  நூலை வாசித்தபோது அது வெறும் முதல் படைப்பு என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு மிக அழகாக   அடையாளக் கவிதைகள் வரம் பெற்று நேர்த்தியாக கைகூடி உள்ளது. அப்படி ஒரு கவிதை, “என் வீட்டு சாளரம்….. “

மேலும் இத்தொகுப்பில் பல சுவாரஸ்யம் நிறைந்த கவிதைகள் பல பொதிந்து கிடக்கின்றன….

தொகுப்பை வாசித்து முடிக்கும் பொழுது இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு கதையை கண் முன் தோற்றுவிக்கின்றது… இது முதல் படைப்பு என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு நேர்த்தியாக உள்ளது கவியே…வாழ்த்துகள் 

இன்னும் நிறைய நூல்களை வாசிக்க வாசிக்க, எழுத எழுத கவிதை நமக்கு மிக அருகில் நெருங்கி வரும்.  

தங்களின் இலக்கியப் பணி தொடர்க..எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள்.