என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்
சமகால இளைஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை. தமிழில் எழுதுவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பல திரைகள் வண்ணமயமாக வந்துவிட்டன. அவற்றிலிருந்து திமிறி விடுபட்டு இளைஞர்கள் இலக்கியத்தின் பால் கடைக்கண் செலுத்துகிறார்கள்.
தம்பி தே. செ.பிரகாஷ் செஞ்சியில் இருந்து பூத்திருக்கும் புதிய இலக்கியப் பூ.
செஞ்சி விழுப்புரம் மாவட்டத்தின் இலக்கியத் துறைமுகம். அங்கிருந்து இயற்கை, செஞ்சிதமிழினியன், விவேகானந்தன், செந்தில் பாலா, இல்லோடு சிவா, இராகுலன், முனைவர் அமுல் ராஜ், பேராசிரியை Thamizharasi Sargunam Manvizhi Ranjith என்று பலரும் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆதரவோடு களம் இறங்கி இருக்கும் பிரகாஷ் இலக்கிய ஆர்வம் மிக்கவர்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பான என் வீடு கவிக்கூடு செஞ்சியில் கவிஞர் மு. முருகேஷ் தலைமையில் வெளியிடப்பட்டது.
மிகுந்த துடிப்புடனும் ஆர்வத் தூண்டலுடனும் இயங்கும் பிரகாஷின் முதல் தொகுப்பை இரு கரம் நீட்டி வரவேற்பதே இன்றையத் தேவை.
அவரது பெரும்பாலான கவிதைகள் அவரது எண்ண நீட்சிகளே. சில தெறிப்பான வரிகள் அவரது குறுங்கவிதைகளில் வெளிப்படுகின்றன.
குறிப்பாக,
தூசித் தட்ட நினைத்தேன்
என் சாளரத்தைத் திறந்தேன்
திறந்ததும் பறந்து சென்றது
உள்ளிருந்து வெளியே
வெளியில் இருந்து உள்ளே
என்கிற வரிகள் மனதின் அலை பாய்தலை உணர்த்தும் வரிகள்.
இரவில் எழுதினேன் (தேர்வு)
விடிந்ததும் திருத்தினேன்
மதிப்பெண் இல்லை என்றது பகல்.
மற்றொரு பக்கத்தில் பொறி என வரிகள்...
ஒருவேளை ஹைக்கூ எழுதினால் மிகச் சிறந்த கவிதைகள் பிறக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த வயதும் சம காலமும் களியாட்டங்களுக்கு இழுத்துச் செல்பவை அங்கிருந்து தப்பி இலக்கியக் கடலில் குதிப்பதே துணிச்சல் மிக்கதுதான்.
தம்பி பிரகாஷ் தீவிரமாக இயங்குகிறார் அவரை அவர் வாசிக்கும் நூல்களும் முயற்சிகளும் இன்னும் உயரத்துக்கு இட்டுச் செல்லும்.