மயில்நிற மங்கை - உதயணன்
தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாது பல்லவர், களப்பிரர் ஆகியோர்களும் ஆண்டுள்ளனர். நான் படித்த ஒரு சில புத்தகங்களில் இருந்து சேர, சோழர்கள் தன் நாட்டு மக்களை பாதுகாக்கவோ அல்லது தனது எல்லையை விஸ்தரிக்கவோ மட்டும் போரிட்டுள்ளார்கள். ஆனால் பாண்டியர்கள் மட்டுமே எப்போதும் பங்காளிச் சண்டை அல்லது தாயாதிகளிடமிருந்து தன் நாட்டை மீட்க போரோ அல்லது போராட்டமோ நடத்தி உள்ளனர். அதே நேரத்தில் எந்த அளவிற்கு இவர்கள் மூவரும் தன் நாட்டை ஆண்டார்களோ அதே அளவிற்கு அவர்கள் போர்களையும் செய்து தனது மக்களையும் நாட்டையும் பாதுகாத்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட வீர வம்சத்தில் அந்த மன்னர்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் அக, புற சிக்கல்களால் சிக்கொண்டுள்ளனர் என்பது பல்வேறு சரித்திர நூல்களை படிக்கும் பொழுது நாம் தெரிந்து கொண்டிருப்போம். அதேபோலவே மதுரை மண்ணை பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் ஆள காஞ்சியைப் பல்லவர்கள் ஒரு காலகட்டத்தில் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க நாம் எவ்வளவோ புத்தகங்கள் படித்திருந்தாலும் ஏதேனும் ஒரு வரி அல்லது வார்த்தை நம்மை நிலைகுலையச் செய்யும்; அல்லது புளகாங்கிதம் அடையச் செய்யும்; அல்லது நெகிழ்ச்சி அடையச் செய்யும்; அல்லது உருகச் செய்யும்; அல்லது திகைக்க வைக்க கூட செய்யலாம்; இது சாதாரண மனிதர்களுக்கு. ஆனால் ஒரு எழுத்தாளருக்கு அல்லது சரித்திர எழுத்தாளருக்கு அந்த ஒற்றை வரி ஒரு கதையை கொடுக்கும். இந்தப் புத்தகத்தில் அதுதான் நடந்திருக்கிறது.
பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் தன்னுடன் போரிட முற்பட்ட சிங்கள மன்னனை முறியடிக்க பல்லவ மன்னன் நிர்பதுங்கவர்மனை நாடினான் (பல்லவர்கள் காலத்தில் நிர்வாகமும் சமூக வாழ்க்கையும் - வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர் சி.மீனாட்சி). இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு ஒரு சரித்திர புதினத்தை படைத்திருக்கிறார். அதை படைத்தவர் மிகச் சிறந்த சரித்திர நாவலாசிரியர் உதயணன் அவர்கள். இந்த ஒற்றை வரி மூலம் அவர் 13 அத்தியாயங்களில் 98 பக்கங்களுக்கு "மயில் நிற மங்கை" என்ற ஒரு புதிய புதினத்தை படைத்துள்ளார்.
காஞ்சி போலவே மதுரையும் சங்ககால நூல்களிலும் சங்க காலப் புலவர்களாலும் பலவாறு பாடப்பட்ட அருமையான ஊர். உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான் மாடக் கூடல் நகர். அப்படிப்பட்ட மதுரை வைகை செல்வச் செழிப்பு கொண்டிருந்தாலும் அந்நாட்டை ஆண்டவர்களின் தாயாதி அல்லது பங்காளிகளால் கூறு போடப்பட்டுள்ளது. மேலும் தாயாதிகள் சுல்தான்கள் முதல் நாயக்கர்கள் வரை ஏற்று மன்னர்களை வரவழைத்து மதுரையை பலவாறாக பிரிந்து கூறு போட்டு அந்நியர்களை ஆட்சி செய்ய வைத்து விட்டார்கள்.
அப்படி நடக்க விருந்த தன் நாட்டை பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் எவ்வாறு பல்லவர்களுடன் சேர்ந்து காக்கிறான் என்பதே கதை.
மயில் நிற மங்கையின் கதையானது, "பாண்டியநாட்டை விழுங்க பல்லவ நாடு சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்க அதே நேரத்தில் தாயாதி ஒருவன் சிங்கள மன்னனிடம் சேர்ந்து கொண்டு பாண்டிய நாட்டை அபகரிக்க நினைக்கிறான். இச்சூழலில் பாண்டிய மன்னர் பல்லவ நாட்டிற்கு ஓலை ஒன்றை அனுப்புகிறார் தமிழ்நாட்டை பாதுகாக்க. பல்லவ நாடு மதுரையை பாதுகாத்ததா? அல்லது மதுரையை கைப்பற்றியதா? என்பதே இந்த சிறிய சரித்திர நாவலின் கதை. இக்கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களாக பல்லவ இளவல், ஒரு சீனன், ஒரு பெண் மற்றும் சில கதாபாத்திரங்களுடன் கடற்போர் ஒன்று. இதை உதயணன் அவர்கள் லாவகமாகக் கையாண்டு ஒரு விறுவிறுப்பான ஒரு சரித்திர நாவலை படைத்துள்ளார்.
இந்த புத்தகத்தின் சிறப்பு ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கவிதையுடன் தொடங்குகிறது. சங்க கால கவிதை போல. ஆனால் இதற்கு விளக்க உரையும் தேவை இல்லை; தெளிவுரையும் தேவையில்லை. நாம் படித்தாலே புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கவிதைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கவிதையும் நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, கலி விருத்தம், கலித்துறை, வெளி விருத்தம், சிந்தியல் வெண்பா என 13 அத்தியாயங்களும் 13 மாடல்களை கொண்டுள்ளது. இதை படிக்கும் பொழுது உதயணன் அவர்கள் சரித்திர நாவலாசிரியர் மட்டுமல்ல; தமிழிலும் புலமை மிகுந்தவர் என்று தெரிகிறது.
அரசியலில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் என்ன ஆவான்?. அதுவே ஒரு பெண் மாட்டிக் கொண்டால் அவளின் நிலை என்ன? இப்போது அந்தப் பெண் அரசியலில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவரின் மகளாக இருந்தால் என்ன ஆகும்?. இந்த கதையில் மயில் நிற மங்கை என்ற பெண்ணையும் அவளை எப்படி அரசியல் சுற்றி விளையாடுகிறது? அதனால் அவள் இழந்தது என்ன? என்பதையும் விளக்குகிறது.
மங்கை ஓர் இடத்தில் பல்லவ இளவல் இடம் கூறும் பொழுது, "செடியெல்லாம் முள்ளாய் இருந்தாலும் இடையில் மலரும் மலர் மென்மையாய் இருப்பது இல்லையா? என்று கூறுபவள் பின்னர் ஓர் இடத்தில், "அரசியல்வாதிகளுக்குப் பிறப்பவைகளெல்லாம் வெறும் பொம்மைகளாய் இயங்க வேண்டும் என்று அவர்களே விரும்புவார்களானால் அதைவிட வேறென்ன துரதிஷ்டம் இருக்க முடியும்" என்று ன்று தன்னைப் பற்றி கூறுகிறாள்.
சிறு புத்தகமாகவே இருந்தாலும் நம்மால் ஒரு மணி நேரத்தில் படிக்கக்கூடிய ஒரு கதையாகவே அமைந்துள்ளது. அதே நேரத்தில் கதையில் முதல் அத்தியாயத்தில், "சிலப்பதிகார மதுரையும் பிற்காலத்தில் விளங்கிய மதுரையும் வேறு வேறு என்றும், சிலப்பதிகார மதுரையானது தற்போதைய மதுரைக்கு அருகே உள்ள அவனியாபுரத்தைச் சேர்ந்த பகுதி" என்று அறிஞரிடையே கருத்து நிலவு நிலவுவதாக குறிப்பிட்டிருப்பார்.
மேலும் கதையில் பாண்டிய மன்னர் பல்லவருக்கு எழுதிய ஓலையில், "நாம் நமக்குள் போரிட்டுக் கொண்டாலும் தமிழர்கள் தாம். தமிழர்கள் இதைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் எங்கிருந்தோ வரும் ஒருவன் இத்தமிழகத்தை ஆள முற்பட்டால் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது" என்று கூறியிருப்பார். எனக்குள்ள ஒரு கேள்வி, பல்லவர்கள் தமிழர்களா? அப்படியானால் ஏன் இன்றுவரை தமிழக சரித்திரம் சேர சோழ பாண்டியர்கள் என்று பல்லவர்கள் இல்லாமல் முடிவடைகிறது என்பதுதான்.