ரத்த மகுடம் - சிவராமன்
குங்குமம் வார இதழில் 159 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த ரத்த மகுடம் தொடர்கதை அதே பெயரில் புத்தகமாக 880 பக்கங்களில் வெளிவந்துள்ளது. நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி பல்லவப்படையால் தீக்கிரையானது. இதற்குப் பழிவாங்க இரண்டாம் புலிகேசியின் மகனும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தர் சில ஆண்டுகளுக்குப் பின் காஞ்சியை நோக்கி படையெடுத்து வந்தார். அந்நிலையில் தமிழகத்தை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவரின் பேரன் பரமேஸ்வர வர்மர் சாளுக்கியப் படையை எதிர்க்காமல் காஞ்சியை அப்படியே விட்டுவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். அதே நேரத்தில் காஞ்சியை கைப்பற்றிய விக்கிரமாதித்தர் பழிக்குப் பழியாக வாதபியை பல்லவர்கள் கொளுத்தியது போல் காஞ்சியை எரிக்காமல் சிறிது காலம் ஆண்டார். "ஏன் பரமேஸ்வர வர்மர் காஞ்சியை விக்கிரமாதித்தற்க்கு தாரை வார்த்தார். அதே நேரத்தில் விக்கிரமாதித்தரும் வாதாபியை நரசிம்மவர்மர் எரித்தது போல் எரிக்காமல் ஏன் அதை ஆண்டார்." இந்த வினாக்களுக்கு கே.என்.சிவராமன் அவர்கள் எழுதிய விடையே இந்த ரத்த மகுடம்.
880 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இதுவரை நான் படித்ததிலேயே மிகச் சிறந்த ஒரு வரலாற்று புதினம் என்றே சொல்லுவேன். எவ்வளவோ வரலாற்றுப் புதினங்களை நான் படித்திருந்தாலும் பக்கத்துக்கு பக்கம் அல்லது ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்திருப்பார். படிக்கும் வாசகர்களுக்கு அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று பரபரப்பாக போய்க்கொண்டே இருக்கும். இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை நான் படித்ததே இல்லை என்றும் சொல்லலாம். இதை படிக்கும் வாசகர்களும் கண்டிப்பாக உணர்வார்கள். தமிழர்கள் ஏதேதோ நாவலை படிப்பதை விட இந்த நாவலை படித்தால் அவர்களுக்கு அந்த உண்மை புரியும். தமிழில் ஒரு தமிழன் எழுதிய மிகச் சிறந்த நாவல் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
எந்த ஒரு சரித்திர நாவலிலும் இரண்டு பேரரசுகள் மோதிக் கொள்ளும் பொழுது ஏதாவது ஒரு பேரரசின் சார்பாகவே நமது மனம் முழுவதும் ஆட்கொள்ளும். ஆனால் இந்த புத்தகத்தில் படையெடுத்து வந்த சாளுக்கியரான விக்கிரமாதித்தரை ஒரு அந்நிய மன்னன் எனக் கொள்ளாமல் இறுதியில் அவரை பாராட்டவே செய்யும். அண்ணா அவர்கள் கூறியது போல மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.
நாவலில் முக்கிய கதாபாத்திரங்கள்: கரிகாலன் (பல்லவ சேனையின் உப தளபதி), சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர், பல்லவ இளவல் ராஜசிம்மர், மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆயனச் சிற்பியின் மகளான சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியும், பல்லவ மன்னர் பரமேஸ்வரர் வளர்ப்பு மகள் என்று கூறப்படும் சிவகாமி, கடிகை பாலகன், புலவர் தண்டி, சாளுக்கிய போர் அமைச்சர் ஸ்ரீராமபுண்ய வல்லவர் ஆகியோர்.
முதல் அத்தியாயத்திலேயே இரண்டு அற்புதமான விஷயங்களை கொடுத்துள்ளார். ஒன்று பல்லவர்கள் தன் நாட்டில் வருவாய் அதிகரிக்க விதித்த பல்வேறு வகையான வரிகள். உதாரணமாக செங்கொடிக்காணம், குவளைக்காணம், நேர்வயம், உல்லியக்கூலி, ஈழப்பூட்சி, இடைப்பூச்சி, குசக்காணம், தட்டுக்காயம், பட்டிகைக்காணம், தறிக்கூறை, பாடாம் கழி, கத்திக் காணம், நெடும்பறை, ஏற்றக்காணம் மற்றும் பல வரிகள். ஒவ்வொரு வரிகளும் என்ன காரணத்திற்காக என்று தெளிவாக கொடுத்துள்ளார். இதற்கு முன் நாம் படித்த நாவல்களில் இதை பற்றிய ஆழ்ந்த தேடுதல்கள் இல்லாமல் பல்லவர் காலத்தில் வரி விதிக்கப்பட்டது என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.
இரண்டாவதாக புரவியைப் பற்றியது. அக்காலத்தில் குதிரையைப் பற்றி நன்கு தெரிந்தவரை அசுவசாஸ்திரி என்று குறிப்பிடுவர் என்று கூறுகிறார். குதிரையை அங்குலம் அங்குலமாக விவரித்து இப்படிப்பட்ட குதிரைகள் இருந்தால் அது எப்படிப்பட்ட குதிரை; அதனை யார் பயன்படுத்துவார்கள் என்பதையும் தெளிவாக கூறுகிறார்.
உதாரணமாக குதிரையின் கழுத்துக்குக் கீழே ஓரங்குல நீளத்தில் இரண்டு அல்லது மூன்று சுழிகள் இருந்தால் அது தெய்வமணி. அரசர் அல்லது அவருக்குச் சமமானவர் இப்புரவியைப் பயன்படுத்துவர் என்றும் குளம்புக்கு மேல் ஒன்று அல்லது இரண்டங்குல நீளத்துக்கு ரோமங்கள் வளர்ந்திருந்தால் அது சிந்தாமணி என்றும் முதுகின் வலப்பக்கம் சுழி இருந்தால் அது மேகலை என்றும் தலை, நெற்றி, மார்பு, பிடரி, பீசனம்(?) என ஐந்து இடங்களில் சுழி இருந்தால் அது ஜெயமங்கலம் என்றும் தலை, மார்பு, ஒரு கால் பீசம், வால் ஆகிய இடங்களில் வெளுத்திருந்தால் அது சஷ்டமங்கலம் என்றும் புரவியைப் பற்றி குறிப்பிடுகிறார்.
63 மற்றும் 64வது அத்தியாயங்களில் யானைகளின் அங்கங்களையும் குணங்களையும் பற விவரித்திருப்பார்.
நாவலின் கதாநாயகன் கரிகாலன் என்றால் கதாநாயகி சிவகாமி. பல்லவ நாட்டை மீட்பது தான் முதல் வேலை என இவர்கள் இருவரும் புலவர் தண்டி மூலம் கை கோர்ப்பதும் பின்னர் இருவரும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் நம்பாமல் சந்தேகப்படுவதும், சந்திக்கும்போது ஏற்படும் ஊடலும், கூடலும், மோதலும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அதே நேரத்தில் கே.என்.சிவராமன் அவர்கள் இருவரையும் வைத்து திரைப்படத்தில் வருவது போல் ஆங்காங்கே வாசகர்களுக்கு கிளுகிளுப்பையும் கொடுத்துள்ளார்.
அதேபோன்று சிவகாமியை பற்றி ஆங்காங்கே வர்ணிப்பதும் படிக்கும் வாசகர்களுக்கு, இளைஞர்களுக்கு மெல்லிய தேக அதிர்வை உண்டாக்கும்.
நாவலின் பாத்திரங்கள் அவ்வப்பொழுது கரிகாலனிடம் சிவகாமியை நம்பாதே; அவள் பல்லவ குலத்தை அழிக்கத்தான் வந்திருக்கிறாள் என்று கூறுவதும் அதுவரை சிவகாமியிடம் ஒட்டி உறவாடும் கரிகாலன் பிறகு விலகுவதும் அதைக் கண்டு சிவகாமி உள்ளுக்குள் இறுகுவதும் ஒரு திரைப்படத்தின் நாயகன் நாயகி ஊடல் காட்சி போலுள்ளது.
"பார்த்திபன் கனவு" நாவலில் கல்கி அவர்கள் பார்த்திபனுக்கு பல்லவ ராஜா உதவி செய்வதாக கதையை கொண்டு சென்றிருப்பார். ரத்த மகுடத்தில் சாளுக்கிய போர் அமைச்சர் ஸ்ரீராமபுண்ய வல்லபரோ கரிகாலனுக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் கரிகாலனுக்கு உதவி செய்து கொண்டிருப்பார். உதாரணமாக கரிகாலனின் தந்தையை வைத்து சோழர்களைத் தங்கள் பக்கம் இழுக்க சாளுக்கியப் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் முயற்சிக்க அதனை விரும்பாத விக்கிரமாதித்தர் கரிகாலனுக்கு செய்தி அனுப்பி அவனை காஞ்சிக்கு வரவழைத்து அவனாக தன் தந்தையை மீட்பது போல் உதவிகள் செய்திருப்பார்.
இதனை ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விக்கிரமாதித்தரின் அண்ணன் அனந்தவர்மரும் தெரிந்து கொண்டு விக்கிரமாதித்தர் மேல் குற்றம் சாட்டி அவர் மீது விசாரணையைத் தொடங்குகின்றனர். விக்கிரமாதித்தரோ அதனை எதிர்கொண்டு முறியடிக்கிறார்.
இச்சூழ்நிலையில் சிவகாமி சாளுக்கிய உளவாளி என்றும் சிவகாமி உருவத்தில் சாளுக்கியர்கள் அனுப்பி வைத்த பெண் என்றும் அவளை அனுப்பியவர்கள் ஸ்ரீராமா வல்லபர் மற்றும் விக்ரமாதித்தன் என்றும் தெரிய வருகிறது. மேலும் விக்கிரமாதித்தர் சாளுக்கிய இளவரசனையும் வேளிர் தலைவனையும்(கடிகை பாலகன்) பாண்டிய நாட்டிற்கு அனுப்புகிறார். அதே நேரத்தில் பல்லவ இளவரசர் கரிகாலனையும், சிவகாமியையும் மதுரைக்கு அனுப்புகிறார். அங்கு பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை கரிகாலன் சந்திக்கிறான். பாண்டிய அரசி கரிகாலனின் அத்தை ஆவார். மதுரையில் வைத்து ஸ்ரீராம வல்லபருக்கே சிவகாமி சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி தானா? என்று சந்தேகம் தலை தூக்குகிறது.
உண்மையில் சிவகாமி என்பவள் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுக்கு இரத்த சம்பந்தமான அல்லது வளர்ப்பு மகள் என்றும்; இல்லை அவள் நரசிம்மவர்ம பல்லவனின் காதலியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப் பேத்தி என்றும்; கரிகாலனின் காதலி என்றும்; கரிகாலனின் எதிரி என்றும்; சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி என்றும் ஆங்காங்கே கூறப்பட்டாலும் உண்மையில் இவள் யார்? என்று பரபரப்பாக கொண்டு செல்கிறார்.
மதுரையில் வைத்து கரிகாலன் பாண்டிய அரசு, சாளுக்கியர்களுக்கு துணையாக நிற்க முடியாத நிலையை உருவாக்கி பல்லவர் பக்கமும் வராதபடி செய்து விடுகிறான். இதற்கிடையில் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்ததே கரிகாலன் என்று தெரிய வரும்பொழுது நாவல் இன்னும் பரபரப்பாக செல்கிறது.
கதையின் இறுதிப் போக்கில் கரிகாலன் , சிவகாமி இருவரும் விக்கிரமாதித்தருக்கும், ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும் அதிர்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சியை நாம் எல்லோரும் சரித்திர நாவல்களின் மூலம் கோயில்களின் நகரம் என்றும் பாடசாலைகளின் நகரம் என்றும் படித்திருப்போம். ஆனால் கே.என்.சிவராமன் அவர்கள் காஞ்சியைப் பற்றி பல தகவல்களைக் கீழ்க்கண்டவாறு திரட்டித் தருகிறார்.
தமிழகத்தின் சிறந்த நகரமாக விளங்கியதும், காஞ்சி என்றும் கச்சி என்றும் கட்சிப்பேடு என்றும் காஞ்சிபுரம் என்றும் பல்வேறு காலகட்டங்களில் அழைக்கப்பட்டு 24 கோட்டங்கள், 74 நாடுகள், 1900 ஊர்கள் அடங்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராகத் திகழ்ந்ததும் -
புண்ணிய தீர்த்தம், இட்டசித்தி தீர்த்தம், மங்கள தீர்த்தம், நீண்டகால புடை தீர்த்தம், சர்வ தீர்த்தம் ஆகிய ஐந்து புண்ணிய தீர்த்தங்களை ஆதிகாலம் தொட்டே தன்னகத்தே கொண்டதும்,
இப்பாரத நாட்டில் உள்ள பல அரச வம்சங்களும் கைப்பற்ற விரும்பியதும் -
ஆழ்வார்கள் மட்டுமின்றி ஆசார்ய பெருமக்களும், சைவ நாயன்மார்களும் அபிமானம் கொண்டு பாடிப் பரவிய புண்ணிய பூமி என்றும், 14 திவ்ய தேசங்களையும் கணக்கற்ற சிவாலயங்களையும் ஆதிசங்கரர் ஸ்தாபித்து வழிபட்ட அன்னை காமாட்சியின் ஆலயத்தையும் கொண்ட கோயில் மாநகர் என்று கொண்டாடப்பட்டதும் -
சைவ காஞ்சி, புத்த கஞ்சி, சமண காஞ்சி, வைஷ்ணவ காஞ்சி என நான்கு மதங்களை உள்ளடக்கிய பெருங்காஞ்சி என்றும் -
மயில்கள் வாழும் கட்சி என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் திரிந்து கச்சி என்று விளிக்கப்பட்டதாகவும், பொற்றோரான் கச்சி, மலிதோரான் கச்சி, மண்டூர் கச்சி, கருவார் கச்சி, ஆனேற்றான் கச்சி என்று தண்டியலங்காரத்தில் போற்றப்பட்டதும் -
தண் காஞ்சி, பண் காஞ்சி, திண் காஞ்சி, வன் காஞ்சி என்று சேக்கிழார் பெருமானால் குறிக்கப்பட்டதும் -
காஞ்சனம் பொழி காஞ்சி என்று கலிங்கத்துப் பரணியில் பேசப்பட்டதும், பல்லவ மன்னர்களுக்கு பிரதான தலைநகராகவும், சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இரண்டாவது தலைநகராகவும், எல்லாக் காலத்திலும் கலை நகரமாகவும் களை கலையாத பொலிவோடும் திகழ்ந்தது என்று பட்டியல் போடுகிறார்.
மேலும் இச்சரித்திர நாவலில் ஐந்து புறாக்கள், சீனர் யாங்சின், காஞ்சி கடிகை சுவடிகள், பல்லவர்கள் தகவல்களைப் பரிமாற பெண்களின் கச்சைகளை பயன்படுத்துதல் என புத்தகம் முழுக்க பல்வேறு விஷயங்களை அளித்துள்ளார்.
காஞ்சியை விக்கிரமாதித்தர் அழிக்காமலும், கரிகாலனுக்கு உதவி செய்ததற்க்கும் காரணம் விக்கிரமாதித்தனின் அறம். அதை அறியும் பொழுது விக்கிரமாதித்தர் மேல் ஒரு மரியாதை உண்டாகிறது. தங்கள் தலைநகரை தீக்கிரையாக்கிய பல்லவர்கள் மீது அறம் சார்ந்த போர் மட்டும் செய்வேன் என்றும் தன் நாட்டை பெண் சாபத்திலிருந்து மீட்பது தான் தன் கடமை என்றும் சொல்லும்பொழுது அவர் மேல் ஒரு பேராதரவு உண்டாகிறது.
பகை மன்னர் விக்கிரமாதித்தன் மேல் பல்லவ மன்னர் மதிப்பு கொள்வதும்; கரிகாலன் விக்கிரமாதித்தன் மேல் மரியாதை கொள்வதும் ஆகச் சிறந்த காட்சிகள். யுத்த முடிவு என்ன ஆனது என்று வாசகர்கள் இப்புத்தகத்தை பக்கம் பக்கமாக புரட்டிப் படித்து மகிழ்ச்சி அடையலாம். சரித்திர நாவலை விரும்பி படிப்பவர்களுக்கு இந்நாவலை கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.
ஆசிரியரிடம் எனக்குத் தெரிய வேண்டிய சில கேள்விகள்:
1. 59 வது அத்தியாயத்தில் சமணம், பௌத்தம் ஆகிய மதங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்து மதம் இப்பொழுது தக்காணம் முதல் தென் எல்லை வரை பரவி இருக்கிறது என்று விக்ரமாதித்தன் சொல்வதாக குறிப்பிடுவார்.இந்து மதம் அப்போது இருந்ததா?
2.60-வது அத்தியாயத்தில் தனது அண்ணன் அனந்தவர்மர் ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரிடம் சாளுக்கிய நாட்டிற்கு அடுத்த அரசராக வர உதவியை நாடி இருப்பதாக குற்றம் சாட்டி அதற்கு அத்தாட்சியாக ஒரு பொருளை எடுத்து தரையில் வீசுவார். அது என்ன?
3. 149 ஆவது அத்தியாயத்தில் 823 வது பக்கம் இறுதியில் சிவகாமி விநயாதித்தனிடம், போர் தொடங்கிவிட்டது இளவரசே. ஆனால், பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் அல்ல! பாண்டியர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில்! அது எப்படி? எனக்கு புரியவில்லை.
4. கதையின் இறுதியில் சைலேந்திர மன்னரின் மகளே என்று சிவகாமியை கரிகாலன் குறிப்பிடுகிறான். அப்படி எனில் சைலேந்திரன் என்பது பல்லவ மன்னனைக் குறிக்கிறதா? ஆம் எனில் ரங்கபதாகை , சிவகாமி, ராஜசிம்மன் மூவரும் சகோதர சகோதரிகள். இதில் புலவர் தண்டி ராஜசிம்மனுக்கு ரங்கபதாகையை எப்படி திருமணம் செய்ய முன் வருகிறார்?.