என் நினைவில் வாழும் கலைஞர் - கௌரா ராஜசேகரன்
கலைஞர் இந்த ஒற்றை வார்த்தை எனக்கு சிறு வயதில் இருந்ததே பரீட்சையும் கலைஞர் புராணமும் பாடி இருக்கிறேன் ஒவ்வொரிடம். ஏனெனில் சிறு வயதில் இருந்தே அவரின் ரசிகன்/தொண்டன் நான். வாழ்க்கையில் நான் சோர்வடையும் போதெல்லாம் எப்போதும் என்னை உற்சாகமடையச் செய்வதும் என்னை நான் அடுத்த கட்ட நகர்வுக்கு தயார் படுத்திக் கொள்ளக்கூடியதுமான ஓர் உந்து சக்தி கலைஞர் அவர்கள். இந்த கலைஞர் என்னும் பிம்பம் எனக்கு மட்டும் இல்லை; தமிழகத்தின் பல பேருக்கும் ஒரு உயிர்நாடியாய் இருக்கிறது.
அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்த பொழுது அவருக்கு புகழ் வணக்கமாக அரசியல்வாதிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், திரையுலகினர், பேச்சாளர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் புகழஞ்சலி செலுத்தினர். இது இந்தியாவில் வேறு யாருக்கும் நடக்காத ஒரு அரிய நிகழ்வு.
அதிலும் தமிழகத்தில் மேற்கூறிய ஒவ்வொரு துறையினரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியது அவர் மேல் கொண்ட காதல் அல்லது அவர் தமிழகத்துக்கு செய்த தொண்டு என்றே கூறலாம். இதற்கு காரணம் கலைஞர் அவர்கள் மேற்கண்ட துறையில் காட்டிய ஈடுபாடும் அவர்களிடத்தில் அவர் நெருங்கி பழகிய பழக்கத்தின் காரணமாகவும் அவருக்கு ஒவ்வொருவரும் புகழஞ்சலி செலுத்தினர். அவருக்கு புகழ் வணக்கம் செலுத்திய வீடியோக்களை நான் பார்க்கும் பொழுது ஒரே ஒரு குறைபாடு ஒன்று எனக்கு தெரிந்தது. அது பதிப்பகத்தார் எல்லோரும் சேர்ந்து புகழ் வணக்கம் செலுத்தி உள்ளார்களா என்று. ஆனால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
அந்த குறையைப் போக்கும் வகையில் கௌரா பதிப்பகத்தின் பதிப்பாளர் கெளரா ராஜசேகரன் அவர்கள் கலைஞர் பற்றிய ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அது 98 பக்கம் கொண்ட "என் நினைவில் வாழும் கலைஞர்" என்ற கட்டுரை நூல். இது கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி 100 புத்தகங்கள் போட முடிவு எடுத்த ராஜசேகரன் அவர்கள் கலைஞர் பற்றி அவரும் எழுதிய நூல் இது. இப்புத்தகத்தில் ராஜசேகரன் அவர்கள் கலைஞருடைய அரசியலை அல்லது அவருடைய வாழ்க்கையைப் பற்றி கூறாமல் புத்தகங்கள் சார்ந்து நடந்த அனுபவங்கள் மற்றும் நினைவுகளை எழுதியுள்ளார்.
கலைஞருடன் பழக்கம் பதிப்பகம் சார்ந்தே தொடங்குகிறது ராஜசேகரன் அவர்களுக்கு. இதற்கு அடிகோலியவர் திருவாரூர் தியாகராஜன் என்ற சின்னக்குத்தூசி அவர்கள். அந்த நன்றி மறக்காமல் அவருடைய பெயரையும் சுட்டிக்காட்டி உள்ளார் இப்புத்தகத்தில். கலைஞரின் கவிதை மழை என்ற கவிதை நூல் புத்தகத்தை முதன்முதலாக பதிப்பிக்கிறார் ராஜசேகரன் அவர்கள். அது சார்ந்து கலைஞருடன் நடந்த நிகழ்வுகளை சில அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளார். கவிதை மழை வெற்றியைத் தொடர்ந்து கலைஞரின் சிறுகதைப் பூங்கா நூலை சிறப்பாக செய்து முடித்ததையும் அதற்கு வெளியீட்டு விழா நடந்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதன் பிறகு சங்க இலக்கிய தொகுப்பாக பல உரையாசிரியர்களின் உரையை சேர்த்து புத்தகமாக ஆக்கியதை கலைஞரிடம் கொண்டு சேர்த்தது, திருவரங்கம் உடையவர் சன்னதியில் அமர்ந்து நிலையில் ராமானுஜருடைய திருமேனி பற்றிய பேச்சு, தன் அன்னையின் நூற்றாண்டு விழா சார்ந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை 200 பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்தது, இன்றைய முதல்வர் தளபதி அவர்களுடனான சந்திப்பு என புத்தகம் முழுவதும் நூல் சார்ந்தே எழுதியுள்ளார்.
கலைஞருடன் நெருங்கி வர வர அவர் அவர்களைப் பற்றி ஒரு பாராட்டுரையோ அல்லது நகைச்சுவையாகவோ கிண்டல் செய்வார் அவர்கள் முகம் கோனாதவாறு. ராஜசேகரன் அவர்களைப் பற்றியும் கீழ்க்கண்டவாறு நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
யாரும் நினைக்காத ஒன்றை கூறுவது தான் கலைஞரின் பிளஸ் பாயிண்ட்.
மேலும் இப்புத்தகத்தில் கலைஞர் அவர்கள் 1937-38 ல் எழுதிய செல்வ சந்திரா என்ற கதைக்கு எழுதிய முன்னுரையை கலைஞரின் கையெழுத்துடனும் கொடுத்துள்ளார்.
எந்த ஒரு வியாபாரமும் மக்களுக்கானது என்றால் அது நிலைபெற்று நிற்கும். அதை ராஜசேகர் அவர்கள் உணர்ந்துள்ளார். ஓரிடத்தில் கூறும் பொழுது "நான் ஆரம்பம் முதலே ஜனங்களுக்கான பதிப்பாளராக என்னை ஆளாக்கிக் கொண்டேன்" என்றே குறிப்பிடுகிறார்.
ஒரே ஒரு அத்தியாயத்தில் மட்டும் கலைஞரின் "கண்ணொளித் திட்டம்" எப்படி ஒரு பாமரனை மகிழ்ச்சி அடையச் செய்தது என தான் நேரில் கண்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இறுதியாக கலைஞர் அவர்கள் 1968 முதல் 2016 வரை எழுத எழுதிய 4041 கடிதங்கள் 54 தொகுதிகளாக சீதை பதிப்பகம் சார்பாக பதிப்பித்து அதைப் பதிப்பிக்க எதிர்கொண்ட சவால்களை குறிப்பிட்டு விருதுநகர் முப்பெரும் விழாவில் வெளியிட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். கலைஞருடைய கடிதங்களை தொகுப்பது என்பது நிச்சயமாக சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அதை கலைஞருடைய உதவியாளர்கள் சண்முகநாதன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோரின் துணையுடன் அசாதாரனமாக முடித்துள்ளார்.
இந்த சாதனைக்காகவே கௌரா பதிப்பகத்தையும் அதன் உரிமையாளர் ராஜசேகரன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தனது முன்னுரையில் கோவி. லெனின் அவர்கள் கௌரவ ராஜசேகர் புத்தகங்களை படிப்பதில்லை என்று கூறியிருப்பார். எழுத்தாளரைப் போல பதிப்பாளரும் வாசகனுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே ராஜசேகரன் அவர்களும் தனது தவறான கொள்கையை கைவிட்டு சரளமாக இந்த புத்தகத்தை எழுதியது போல மேலும் பல புத்தகங்களைப் படைக்க வேண்டும்; படிக்க வேண்டும்.

"போடுவது கருப்பு சட்டை
போடும் புத்தகம்
ராவண காவியம்
பெயர் மட்டும்
சீதை பதிப்பகமா?".