விண்மீன்களின் விதைகள் - செல்வகுமார்
இமயம் வென்றான் என்ற பெயரில் முகநூலில் இயங்கி வரும் சிரா.செல்வகுமார் அவர்கள் அன்புடன் அனுப்பி வைத்த ஐந்து கவிதை புத்தகத்தில் முதல் புத்தகமான "விண்மீன்களின் விதைகள்" என்ற இந்த ஹைக்கூ புத்தகம் பல்வேறு நிகழ்வுகளை பாடுபொருளாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த விண்மீன்களின் விதைகள் என்ற இந்த ஹைக்கூ கவிதை சிரா.செல்வகுமார் அவர்களின் முதல் கவிதை தொகுப்பு. சிரா.செல்வகுமார் அவர்கள் பொறியியல் பட்டதாரியாக இருப்பினும் தமிழ் மேல் கொண்ட காதலால் பள்ளி கல்லூரி காலத்தில் இருந்தே கவிதைகளை எழுதி வருகின்றார்.
முதல் கவிதைத் தொகுப்பு எப்போதுமே எழுத்தாளர்களுக்கு சிறப்பான ஒன்று. மேலும் முதல் கவிதைத் தொகுப்பு எப்போதுமே காதலைப் பாடி வரும். ஆனால் சில செல்வகுமார் அவர்கள் காதலை, காதலியை முக்கியமான பாடு பொருளாகக் கொண்டில்லாமல் பறவைகளை, விவசாயத்தை, சாக்கடைத் தொழிலாளியை, எளிய மக்களை, ஓட்டு அரசியலை, அறிவியலை, ஈழத்தை எழுதியுள்ளார். கவிஞன் தன் கண்ணில் படும் அனைத்து சமூக சீர்கேடுகளையும் பாடுபொருளாகக் கொண்டு எழுத வேண்டும்; அந்த வகையில் சிரா.செல்வகுமார் அவர்கள் தனது பணியை செவ்வன செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் கவிஞன் எப்போதுமே ஈர நெஞ்சினன். சிரா.செல்வகுமார் அவர்களும் தனது இந்த முதல் புத்தகத்தின் மூலம் "ஏழை தாசன்" என்ற சிற்றிதழ் ஆசிரியரான எசு.விஜயகுமார் அவர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் நிரூபித்துள்ளார்.
அறிவியல் எப்போதுமே ஆக்க சக்திக்கு முதன்மையாக இருக்க வேண்டும். ஆனால் செல்போன் கதிர்வீச்சின் மூலம் சிட்டுக்குருவிக்கு ஏற்பட்ட அழிவை இந்த ஹைக்கூ சுட்டிக்காட்டுகிறது.
மனிதன் எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துவான். தன் பெருமைக்காக எதை வேண்டுமானாலும் செய்வான். உணவுக்காக கையேந்தும் கரங்கள் இருக்க மனிதனின் மோசமான குணத்தை வெளிப்படுத்தும் இந்த இரண்டு கவிதைகளும் அதற்கு சாட்சி.
ஒரு நாட்டிற்கு மனிதவளம் எப்போதும் முக்கியம். அந்த மனித வளம் மேம்பட வேண்டுமானால் கல்வி முக்கியம். ஆனால் கல்வியையும் அதற்கு எதிராக மனித மனங்களை மனிதவளத்தை அளிக்கும் சாராயத்தையும் இந்த ஹைக்கூ சுட்டிக்காட்டுகிறது.
மனிதர்கள் எப்போதும் போதும் என்ற மனநிலையில் இருப்பதில்லை. இலவசமாக கொடுத்தாலும் அந்த இலவசமும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவன். அந்த அவலக் காட்சியை இந்த மூன்றடி ஹைக்கூ கவிதை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் எனக்கு இந்த கவிதையை இப்படி எழுதியிருந்தால் நன்றாக இருக்குமோ என்ற ஒரு சிந்தனை.
இறுதியாக ஒரு காதல் கவிதை.
இலங்கையில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்ற நிகழ்வையும் சுட்டி காட்டியுள்ளார். தனித்தமிழ் எழுத்தையும் சுட்டிக்காட்டி உள்ளார். கையூட்டு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். இயலின்பால் கருணைக் கொண்டு அவர்களையும் கற்றுக் கவிதை எழுதி உள்ளார். ரூபாய் மதிப்பு சரிவதையும் சுட்டிக்காட்டுகிறார். காதலை மட்டும் பேசாமல் மொழி அரசியலையும் தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசியலைப் பற்றியும் சுட்டிக் காட்டுகிறார். எனக்கு பிடித்த மற்றொரு கவிதை, எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தொண்டர்கள் அடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பின்னால் அவர்கள் கட்டிக் கொள்வார்கள். கேட்டாலும் சபை நாகரிகம் என்று கூறுவார்கள். அதைப்பற்றி எழுதும் பொழுது,
சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை சிரா.செல்வகுமார் அவர்கள் தன் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் சிறந்த பல படைப்புகளை வெளியிட வாழ்த்துகள்.

வளரும் தொழில்நுட்பம்
குறைந்து கொண்டே வருகிறது
சிட்டுக்குருவி

வாசலில் யாசகர்
நிரம்பி வழிகிறது
கோயில் உண்டியல்.
யாசிக்கும் கைகள்
அழுக்காய் இருக்கிறது
பக்தர்களின் மனங்கள்.
நிரம்பி வழிகிறது
கோயில் உண்டியல்.
யாசிக்கும் கைகள்
அழுக்காய் இருக்கிறது
பக்தர்களின் மனங்கள்.
ஒரு நாட்டிற்கு மனிதவளம் எப்போதும் முக்கியம். அந்த மனித வளம் மேம்பட வேண்டுமானால் கல்வி முக்கியம். ஆனால் கல்வியையும் அதற்கு எதிராக மனித மனங்களை மனிதவளத்தை அளிக்கும் சாராயத்தையும் இந்த ஹைக்கூ சுட்டிக்காட்டுகிறது.
குளிர் அறையில் மதுக்கடை
நாடு முன்னேறுகிறது
கூரையிழந்தப் பள்ளி
நாடு முன்னேறுகிறது
கூரையிழந்தப் பள்ளி
மனிதர்கள் எப்போதும் போதும் என்ற மனநிலையில் இருப்பதில்லை. இலவசமாக கொடுத்தாலும் அந்த இலவசமும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவன். அந்த அவலக் காட்சியை இந்த மூன்றடி ஹைக்கூ கவிதை சுட்டிக்காட்டுகிறது.
விலையில்லா பொருட்கள்
நியாய விலை கடையில்
மகிழுந்து ஏழைகள்
நியாய விலை கடையில்
மகிழுந்து ஏழைகள்
ஆனால் எனக்கு இந்த கவிதையை இப்படி எழுதியிருந்தால் நன்றாக இருக்குமோ என்ற ஒரு சிந்தனை.
மகிழுந்து ஏழைகள்
நியாயவிலைக் கடையில்.
விலையில்லா பொருட்கள்
நியாயவிலைக் கடையில்.
விலையில்லா பொருட்கள்
இறுதியாக ஒரு காதல் கவிதை.
வெட்கப்படும் அவள்
வற்புறுத்தி கூட்டிச் செல்கிறேன்
அங்கேயே நிற்கும் மனசை
வற்புறுத்தி கூட்டிச் செல்கிறேன்
அங்கேயே நிற்கும் மனசை
இலங்கையில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்ற நிகழ்வையும் சுட்டி காட்டியுள்ளார். தனித்தமிழ் எழுத்தையும் சுட்டிக்காட்டி உள்ளார். கையூட்டு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். இயலின்பால் கருணைக் கொண்டு அவர்களையும் கற்றுக் கவிதை எழுதி உள்ளார். ரூபாய் மதிப்பு சரிவதையும் சுட்டிக்காட்டுகிறார். காதலை மட்டும் பேசாமல் மொழி அரசியலையும் தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசியலைப் பற்றியும் சுட்டிக் காட்டுகிறார். எனக்கு பிடித்த மற்றொரு கவிதை, எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தொண்டர்கள் அடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பின்னால் அவர்கள் கட்டிக் கொள்வார்கள். கேட்டாலும் சபை நாகரிகம் என்று கூறுவார்கள். அதைப்பற்றி எழுதும் பொழுது,
நண்பர்களாக தலைவர்கள்
அரசியல் அகராதியில்
பகைவர்களாக தொண்டர்கள்.