கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் என்ற புத்தகம் பாரதி பதிப்பகம் மூலம் வெளிவந்த புத்தகமாகும். இச்சிறுகதைகள் முரசொலி மற்றும் பல இதழ்களில் கலைஞர் அவர்கள் அவ்வப்போது எழுதியவை. இப்புத்தகம் 279 பக்கங்களுடன் மொத்தம் 37 சிறுகதைகளை கொண்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்றாகவே பாவித்தவர். தமிழ் இலக்கியச் சூழலில் கலைஞரின் இலக்கியப் பங்களிப்பை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.கலைஞர் அவர்களின் அரசியலை அவரின் அரசியல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அவரின் இலக்கிய பங்களிப்பை மக்களிடமும் தன்னிடம் ஒரு மிகப்பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளாதது காலத்தின் நகைமுரண்.
இந்த புத்தகத்தில் உள்ள சிறுகதைகளை கலைஞர் எந்த காலகட்டத்தில் எந்தெந்த பத்திரிகைகளில் எழுதினார் என்ற விவரங்கள் தரப்படவில்லை. மேலும் கலைஞர் அவர்கள் தன்னுடைய பேச்சு மற்றும் திரைத்துறையில் எப்படி தனது கொள்கைகளை வெளிப்படுத்தினாரோ அதுபோலவே இச்சிறுகதைகளிலும் தனது கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கலைஞர் அவர்களின் சிறுகதைகளை கடவுள் மற்றும் புராண எதிர்ப்புச் சிறுகதைகள், பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, போலி சாமியார்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த சிறுகதைகள் என பிரிக்கலாம்.
இச்சிறுகதைப் புத்தகத்தில் கடவுள் மற்றும் புராண எதிர்ப்பு சிறுகதைகளாக 'கண்ணடக்கம், விஷம் இனிது, கங்கையின் காதல்,நளாயினி, ஒரிஜினலில் உள்ளபடி' போன்ற சிறுகதைகளும்
பகுத்தறிவுக் கதையாக 'ஆட்டக் காவடி' என்ற சிறுகதையும் இந்தி எதிர்ப்பு சார்ந்து 'சந்தன கிண்ணம்' என்ற சிறுகதையும், போலி சாமியார்களைப் பற்றி சங்கிலிச்சாமி என்ற சிறுகதையும் வெளிவந்துள்ளது.
கண்ணடக்கம் என்ற சிறுகதையில் பக்தனுக்கும் சாமிக்கும் நடக்கும் உரையாடலை கலைஞர் இவ்வாறு அமைத்திருப்பார்.
"பத்ரகாளி! மகாதேவி! மகிஷாசுரமர்த்தினி!!" என்று கூவினான்.
"யார் அது?" காளி கேட்டாள்.
"என்னைத் தெரியவில்லையா?" என்று கதறினான் பக்தன்.
"தெரியவில்லை... சொல்!"
"நான் தான் உன் பக்தன்-காளிதாசன்!"
"எந்தக் காளிதாசன்? நாக்கிலே எழுதி நாவலனாக ஆக்கினேனே;அந்த காளிதாசனா?"
"இல்லை தாயே நான் அவனில்லை! நான் இயற்கையிலேயே கொஞ்சம் புத்திசாலி! ஆனாலும் உன் பக்தன்!"
"சரி போகட்டும்-பக்தா! என்ன வேண்டும் உனக்கு?"
"என்ன தாயே இப்படிக் கேட்கிறாய்? ஊரிலே சூறை நடக்கிறதே உனக்கு தெரியாதா?"
"சூறையா?"
"ஆமாம் தேவி! கொள்ளை கொள்ளையாக மக்கள் சாகிறார்கள். கொடுமையான வாந்தி பேதி! கொடிய விஷக்காய்ச்சல்! பிளேக்காம்; புதுவித இங்கிலீஷ் வியாதி! காமாலை!... அய்யய்யோ சொல்லத்தரமல்ல தாயே; கூடை கூடையாகக் குழந்தை பிணம்; பாடை பாடையாகப் பெரிய பிணம்!"
"அய்யோ..... அப்படியா? எனக்குத் தெரியாதே!"
"உண்மைதான் அம்மா உண்மைதான்; உன் மக்கள் அனைவரும் இன்னும் ஓரிருநாட்களில் ஒழிந்துவிடுவார்கள்!"
"பக்தா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறாயா?"
"ஆயிரம் சொல் அம்மையே!"
"கொடிய நோயினால் அழிந்துவிட்ட குடும்பங்களில் மிச்சமிருப்பவர்களிடம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைச் சொல்!"
மிக மோசமான விமர்சனம் பெற்ற 'வாழ முடியாதவர்கள்' என்ற சிறுகதையும், அதிக அளவில் பாராட்டுப் பெற்ற 'குப்பைத்தொட்டி' என்ற சிறுகதையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. குப்பைத்தொட்டி சிறுகதையானது வீதியோரத்தில் இருக்கும் ஒரு 'குப்பைதொட்டி' தன்னைப் பற்றி கூறுவதாக கதை அமைந்துள்ளது.