ஒரு மரம் பூத்தது
கலைஞர் மு கருணாநிதி அவர்களின் குறுநாவல் ஒரு மரம் பூத்தது. இது சிறுகதை உலகில் புரட்சி ஏற்படுத்திய ஹென்றியின் 'கடைசி இலை' என்ற சிறு கதையை மையமாக வைத்து இககுறு நாவலை எழுதி உள்ளார். இக்குறுநாவல் அக்கால சினிமாவை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
தேவகி 26 வயதான ஒரு இளம் விதவை. அவள் தன் ஒரே மகனான சிறுவன் பாபுவுடன் வாழ்ந்து வருகிறார். அவள் தனது வீட்டின் கீழ்ப் பகுதியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஓவியக் கூடம் வைத்திருக்கும் ரகு என்பவருக்கும் மறுபகுதியை ராதா என்கிற போட்டோகிராபருக்கும் வாடகைக்கு விட்டு அதில் வாழ்ந்து வருகிறாள். இச்சூழ்நிலையில் ராதா தேவகியிடம் தவறாக நடக்கும் பொழுது ரகு தலையிட்டு தேவகியை காப்பாற்றுகிறான். மேலும் தேவகி செய்த ஒரு கொலைக்காக ரகு சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
சிறையில் ரகுவுக்கு மாணிக்கம் என்பவரின் தொடர்பு கிடைக்கிறது. மாணிக்கம் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் தேவகிக்கு உதவுவதாக ரகுவிடம் உறுதி அளிக்கிறான்.
இந்நிலையில் ராதா மீண்டும் தேவகியை மிரட்டுகிறான். சிறையிலிருந்து வெளியே வந்த மாணிக்கம் தேவகிக்கு உதவி செய்து அவளை மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று தன் இடத்தில் அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறான்.
தேவகி மாணிக்கத்திடம் தந்திரமாக பேசி ஊட்டி கான்வென்ட்டில் படிக்கும் தன் மகன் பாபுவை வரவழைக்கிறார். மாணிக்கம் இடம் வரும் பாபு தன் தாயின் சூழ்நிலை புரிந்து அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச்சென்று ரகுவையும் போலீசாரையும் அழைத்துவந்து தன் தாயை காப்பாற்றுகிறான். இறுதியில் ரகுவும், தேவகியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.