நச்சுக் கோப்பை

நச்சுக் கோப்பை

64 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம் என்றாலும், இப்புத்தகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிரம்பியுள்ளது. அதாவது, மறுமணம், காதலின் மேன்மை, மூட நம்பிக்கைகள், மதுவினால் ஏற்படும் தீமைகள், அண்ணன் தங்கையின் பாசம், பெண்ணடிமை, சாதியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு போன்ற பல விஷயங்களும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன.
"கடலில் எழும் அலை போன்றது காதல்; அதன் கொந்தளிப்பில் சிக்கியவர் எவரும் தப்புவது இல்லை!"

ஏ பணமே! பகல் இரவு என்று பாராது பாடுபட்டுப் பசி பசி என்று ஏங்கி நடுநிசியிலே நின்றாலும், இதோ
கொஞ்சம் புசி புசி என்று கூறிடாத இரும்பு நெஞ்சின் இரும்பு பெட்டியில் தூங்கும் பணமே!

இதுபோன்று இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் மிகவும் அருமையாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அழகிய தமிழ் மொழியில் சமூகக் கருத்துகளை புத்தகம் மூலம் எடுத்துரைப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே.

No of users in online: 121