மதுரை மகுடம் - கலைமாமணி விக்கிரமன்
"மதுரை மகுடம்". கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதிய வரலாற்று நாவல். இந்த தலைப்பே கதையை சொல்லும். மதுரையை நாயக்க மன்னரான சொக்கநாத நாயக்கர் தனது அரசி மங்கம்மாளுடன் ஆட்சி புரிந்தார். சொக்கநாதரின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து "தாய்" வார இதழில் ஏறத்தாழ ஆறு மாதங்கள் விக்கிரமன் அவர்கள் எழுதிய தொடர், "மதுரை மகுடம்" என்னும் தலைப்பில் நாவலாக வெளிவந்துள்ளது.
27 அத்தியாயங்களுடன் 200 பக்க நாவலாக வெளிவந்துள்ளது இந்நூல். மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தனது சகோதரச் சண்டை காரணமாக தனக்கு ஆதரவாக அன்னியர்களை மதுரைக்கு அழைத்தனர். பிறகு மதுரை விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. மேலும் பாண்டிய மன்னரான வரகுண பாண்டியன் மதுரையை இழந்து தென்காசியைத் தலைநகராக்கி பாளையக்காரர் என்னும் பெயருடன் ஆண்டு வந்தான். அவனுடைய ஒரே மகள் முத்தம்மாள்.
அதே நேரத்தில் மதுரையில் சொக்கநாதருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றும் புரளி பரவத் தொடங்கியது. இதற்கு காரணம் சொக்கநாதர் அண்டை நாடுகளுடன் போர், மறவர் நாடு, சேர நாடு, மைசூர் நாடு என எல்லா நாடுகளுடன் போர் நடத்தி பொன்னையும் பொருளையும் வீணாக்கி உள்ளார். அதன் காரணமாக மங்கம்மாளுக்கும் சொக்கநாதருக்கும் கடும் வாக்குவாதம். மேலும் அண்டை நாடுகளுடன் அவர் கொண்ட கொள்கையில் தவறு மற்றும் அவருடைய ஒரே மகன் முத்து வீரப்பன் ஓராண்டு காலமாக மதுரை மாளிகையில் இருந்து எங்கு சென்றான் என்று தெரியாமல் அந்த கவலை இவைகள் அவருடைய உடலையும் உள்ளத்தையும் பாதித்து சற்று மன குழப்பத்தில் இருக்க அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று செய்தி பரவியது.
எனவே மங்கம்மாள், உண்மையில் தனது கணவருக்கு ஏற்பட்ட இந்த குழப்பம் அவரை பைத்தியக்காரராக மாற்றிவிடும் என்றும் அவருக்கு பூரண ஓய்வு தேவை என்றும் மதுரை மாளிகையில் அமைச்சர்கள் சிலரின் குழப்பத்தாலும் அமைச்சர்கள் மன்னரை சந்திக்கக் கூடாது என்ற திட்டத்தினாலும், 'குற்றாலத்து அருவியில் தினமும் நீராடினால், திரிகூடமலைச் சாரலில் வீசும் மூலிகைக் காற்று பட்டால் சொக்கநாதரின் நோய் தீரும்' என்று அவரை குற்றாலம் அழைத்து வருகிறாள்.
இதற்கிடையில் வரகுண பாண்டியன் சேர நாட்டுக்குத் தூது அனுப்பி தனது மகள் மூலம் மணத்தொடர்பு கொண்டு சேர நாட்டவர்கள் உதவியோடு மதுரை மகுடத்தை எளிதில் வென்று விடலாம் என்ற முடிவுக்கு வருகிறார். இதற்கு காரணம் அவர் மங்கம்மாளிடம் விடுத்த சூளுரை.
"இழந்த மதுரை மகுடத்தை மீண்டும் அடையா விட்டால் பாண்டிய வாரிசு ஒருவர் மதுரை நாட்டை ஆளும் நிலையை ஏற்படுத்தாவிட்டால், என் பெயரை வரகுணராம குலசேகரன் என்பதை மாற்றிக்கொண்டு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதியையும் துறந்து காட்டிற்கு சென்று விடுகிறேன்" என்று மங்கம்மாளிடம் சூளுரைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் மதுரை மாளிகையில் நடைபெறும் சில சூழ்ச்சிகளாலும் வரகுணராம குலசேகரன் இம் முடிவுக்கு வருகிறார். இந்நிலையில் ஒற்றர்கள் இருவர் பாண்டிய மன்னன் பாதுகாவலர்களால் கைது செய்யப்படுகின்றனர். இளவரசி ஒற்றன் ஒருவன் மீது காதல் கொள்கிறாள்.ஆனால் ஒற்றர்கள் இருவரும் சிறையில் இருந்து தப்பித்து செல்கின்றனர்.
மதுரை நாட்டு தளபதி இலிங்கமன், திருச்சி சுற்றுப்புறபகுதிகளுக்கு தான் ஓர் அரசராக வேண்டும் என்ற ஆசைப்படுகிறார். அதற்கு மன்னருக்கு ஆலோசனை கூறும் இராயசம் ரங்கப்பனையும், பிரதானி சென்னப்பனையும் ஆசை காட்டி கூட்டு சேர்த்துக் கொண்டு திட்டங்கள் தீட்டுகின்றனர். இராயசம் தன் ஆசை நாயகி அபரஞ்சியிடம் இத்திட்டங்களை கூற அது மங்கம்மாள் காதுக்கும் வந்து சேருகிறது.
இவர்களைப் போலவே மதுரை குதிரைப்படைத் தலைவன் ருஸ்தம்கான், தம் மூதாதையர் 300 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆண்டுகள் மதுரை நாட்டை ஆண்டதைப் போல் தாமும் ஒரு நாள் மதுரை அரியணையில் அமர வேண்டும் என கனவு காண்கிறான். ஒரு நாள் ருஸ்தம்கான் பிரதானி சென்னப்பனைச் சந்திக்கும்போது சொக்கநாதருடைய தம்பி முத்து அழகாத்திரி தமக்கு ஆதரவாக ஆட்களை ரகசியமாக சேர்த்து வருவதாகக் கூற மற்றொரு சந்திப்பில் பிரதானி சென்னப்பன் மதுபோதையில் தங்களுடைய திட்டத்தை கூறி விடுகிறான்.
தன் அண்ணியிடம் கொண்ட கோபத்தினால் முத்து அழகாத்திரி திடீரென ஒரு நாள் தன் அண்ணன் சொக்கநாதரை மங்கம்மாள் இல்லாத நிலையில் சிறைபிடித்து மதுரை அழைத்துச் சென்று அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரையும் நம்ப வைக்கிறான்.. இலிங்கமன் மற்றும் ரங்கப்பனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். அடுத்த கட்டமாக அரியணை ஏற திட்டம் போடும்போது ருஸ்தம்கான் எதிர்பாராத விதமாக முத்து அழகாத்திரியை கைது செய்து சொக்கநாதருடன் சிறையில் அடைக்கிறான்.
இந்நிலையில் சாமியார் இருவர் மங்கம்மாளை சந்தித்து பாண்டியன் பாதுகாப்பில் செல்லுமாறு அறிவுரை கூறுகின்றனர். ஆனால் அவ்வளோ பாண்டியன் தன்னிடம் சூளுரைத்த நிலையில் அவனிடம் தஞ்சம் புக மறுத்து கோபப்படுகிறாள். இறுதியில் மங்கம்மாளுக்கு சாமியார்கள் இருவர் யார் என்று தெரிகிறது. இளவரசிக்கும் அந்த ஒற்றர்கள் யார் என்றும் தெரிகிறது.
கடைசியில் அரசு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் அரியணை ஏறுகிறான். ஒரு கட்டத்தில் மங்கம்மாளுக்கு தானே மீண்டும் அரியணை ஏற வேண்டும் என்ற ஆசையுடன் சில சூழ்ச்சிகள் செய்ய ஆரம்பிப்பதாக ஆசிரியர் நாவலை முடிக்கிறார்.