ஓர் இரவு - அறிஞர் அண்ணா
1944 ஆம் ஆண்டு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் நாடக சபா விற்காக அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட நாடகம் "ஓர் இரவு". இந்த நாடகம் அறிஞர் அண்ணா அவர்களால் ஒரே இரவில் எழுதப்பட்டது. மேலும் இந்நாடகம் 49 காட்சிகளுடன் 128 பக்கங்களுடன் பூம்புகார் பதிப்பகம் சார்பாக 1997 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.
இது நாடகம் ஓர் இரவில் ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார்.
முதல் காட்சியாக கணவன் மனைவி இருவரின் ஊடலையும், இரண்டாவது கட்சியாக தாய் மற்றும் அவளது சிறுமியின் உரையாடலையும் மூன்றாவது கட்சியாக கிண்டி ரேஸ் பணம் கட்டுபவர்களையும் நான்காவது காட்சியாக தனது இளம் விதவை மகளை பக்தவிஜயம் படிக்க சொல்லிவிட்டு ஒரு வயோதிகளும் அவனுடைய இரண்டாம் தாரமும் சினிமா பார்க்க சொல்வதையும் ஐந்தாவது கட்சியாக ஊரின் சாவடியில் சிலர் சைவம் பெரிய சார், வைஷ்ணவம் பெருசா என்று தர்க்கம் செய்வதையும் ஆறாவது காட்சியாக ஒரு கான்ஸ்டபிள் கள்ளன் ஒருவனை இழுத்துச் செல்வதையும் ஏதாவது கட்சியாக இளம் காதலர்கள் டாக்டர் சேகர் சுசீலா இருவரும் பூந்தோட்டத்தில் காதல் மொழி பேசிக்கொண்டிருப்பர்
இவர்களை தவிர கருணாகரத்தேவர்(சுசீலாவின் தகப்பனார்), ஜெமீன்தார் ஜெகவீரன் (கருணாகரத்தேவரின் மைத்துனன்), சொர்ணம்(கருணாகரத்தேவரால் கைவிடப்பட்ட அபலை) ரத்னம்( சொர்ணத்தின் மகன் - திருடன்), பவானி (சுசீலாவின் தாய்)ஆகியோர் இந்த நாடகத்தின் உறுப்பினர்கள்.
சுசீலாவை ஜெமீன்தார் ஜெகவீரன் விரும்புகிறார். ஆனால் சுசீலாவோ டாக்டர் சேகரை விரும்புகிறாள். முதலில் கருணாகரத்தேவர் ஜெகவீரனிடம் "என் மகள் சுசீலாவை நான் அடுப்பூதும் பெண்ணாக்கவில்லை. படிக்க வைத்தேன்; சுசீலா கர்நாடகமல்ல; புதுயுகப் பெண்ணாகி விட்டாள். அவளுக்குப் பெண்கள் முன்னேற்றத்தில் விசேஷ அக்கறை. நான் சுசீலாவை திருமணம் செய்ய வற்புறுத்தினால், அவள் கண்களில் நீர் வழியுமே! அது தீயை விடச் சுடுமே! நான் என்ன செய்வேன்? என்று மன்றாடுகிறார்.
அதற்கு அடுத்த காட்சிகளில், கருணாகரத்தேவர் சுசீலாவிடம் ஜெகவீரனை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இதற்கு காரணம் கருணாகர தேவரின் இரகசியம் ஒன்று ஜெமீன்தார் ஜெகவீரனிடம் இருந்ததால் ஜெமீன்தார் சொல்படி கருணாகரத்தேவர் நடக்கிறார். இச்சூழ்நிலையில் சுசீலா மாடியில் இருக்கும் பொழுது திருடன் ரத்னம் என்பவன் வருகிறான். அவனிடம் தனது இக்கட்டாண சூழ்நிலையை சொல்லி தனது காதலனாக நடிக்கச் சொல்கிறாள். அதைப் பார்த்து ஜெகவீரன் தன்னை வெறுத்து விடுவான் என்றும் நினைக்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக டாக்டர் சேகர் அவளைச் சந்திக்க, ரத்னம் அவன் தான் ஜெகவீரன் என்று நினைத்து சுசீலாவுடன் காதல் நாடகம் ஆடுகிறான். சுசீலாவோ திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தில் திருடனை தாக்க முனைகிறாள். சிறு கைகலப்புக்குப் பின் திருடன் ஓடுகிறான். அவனை துரத்திச் சென்ற டாக்டர் சேகர் அவன் யார் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். இருவரும் ஒன்று சேர்ந்து ஜெகவீரனை முறியடித்து அவனிடமிருந்து கருணாகரத்தேவரை காப்பாற்றுகிறார்கள்.
கே.ஆர்.ராமசாமி தனியாக கிருஷ்ணன் நாடக சபா என ஒன்று துவங்க அதன் முதல் நாடகம் அரங்கேற்ற அண்ணாவிடம் நாடகம் எழுதித்தரும்படி கேட்க அவர்களுக்காக அண எழுதிய நாடகம் ஓர் இரவு. இந்த நாடகம் ஏ.வி.எம். அதிபர் மெய்யப்ப செட்டியார் மேற்பார்வையில் ப.நீலகண்டன் இயக்கி, 'ஓர் இரவு' என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 1951-ம் ஆண்டில் வெளி வந்தது. இப்படத்தில் டி.கே.சண்முகம்(கருணாகரத்தேவர்), லலிதா(சுசீலா) கே.ஆர்.ராமசாமி(ரத்னம்), நாகேஸ்வரராவ்(சேகர்), டி.எஸ்.பாலையா(ஜெகவீரன்) ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் யூ ட்யூபில்(You Tube) காணக் கிடைக்கிறது.
வலைதளத்தில் "ஓர் இரவு" என்று தேடினால் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் இப்புத்தகத்தில் இப்படைப்பை பற்றிய எந்த ஒரு தகவல்களும் அதாவது சினிமாவாக தயாரித்தது; யாருக்காக எழுதப்பட்டது? எப்பொழுது எழுதப்பட்டது? போன்ற தகவல்கள் ஏதும் இல்லாமல் வெளிவந்துள்ளது.