கபாடபுரம் - நா.பார்த்தசாரதி
பாண்டியப் பேரரசின் தலைநகரமாக "மதுரை"யை மட்டுமே அறிந்திருந்த நான், இப் புத்தகத்தின் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரமான "கபாடபுர"த்தை பற்றி அறிந்து கொண்டேன். கடைசிக் கடற்கரை கோநகரான "கபாடபுரம்" கடல்கொள்ளப்பட்டு அழிந்து விட்ட பிறகே மதுரையை தலைநகரமாக மாற்றியிருக்கிறார்கள்.
முத்தும், இரத்தினமும் ஏற்றுமதி செய்து, அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து, பாண்டியர்களின் தேர்ப்படையை வளர்த்து உருவாக்கிய மன்னன் வெண்தேர்ச்செழியனும், அவரது பேரன் சாரகுமாரனும் இக்கதையின் மையக்கதாபாத்திரமாக இருக்கிறார்கள். இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்ச்சங்கமாகிய இடைச்சங்கத்தில் 59 தமிழ்ப் பெரும் புலவர்கள் இருந்தனர்; நூலாராய்ந்தனர் மற்றும் கவியரங்கேற்றினர் என்றெல்லாம் குறிப்பிடுகிறார் ஆசிரியர் நா.பார்த்தசாரதி.
கடற்கரை கோநகரமான கபாடபுரத்தின் துறைமுகத்தில் பல நாட்டு கப்பல்கள் போவதும், வருவதுமாக எப்போதும் கலகலப்பு நிறைந்தும், முத்துக்கள் மற்றும் இரத்தினங்களை ஏற்றுமதி செய்து எந்நேரமும் பரபரப்பாக விளங்கியதை கற்பனை செய்து பார்த்தால் அருமையாக உள்ளது.
குருகுலவாசம் சென்று பல்வேறு கலைகளையும், இலக்கண, இலக்கியங்களையும் கற்றுத் தன் நாடு திரும்பும் இளைய பாண்டியன் சாரகுமாரன் இசையைப் பற்றி பிடித்துக் கொள்கிறார். அவ்வாறாக "நகரணி மங்களநாள்" விழாவில் பங்கேற்க தாய்நாடு நோக்கிச் செல்கையில், பாணர் கூட்டத்தில் ஒருத்தியான கதையின் நாயகி "கண்ணுக்கினியா"ளை சந்திக்க நேரிடுகிறது.
யாழினைக் கொண்டு அப்பெண் மீட்டும் இசையில் மனம் கரைந்து காதலில் விழுகிறார் இளையபாண்டியன். இந்த காதல் விஷயம் முதிய பாண்டியருக்கு தெரிய வர சாரகுமாரனை திசை திருப்பவும், புதிய அனுபவத்திற்காகவும் அவுணர் வீதி முரசமேடை பற்றி அறிந்து வரச் சொல்கிறார். முரசமேடை இரகசியம் பற்றி சுரங்கப்பாதையில் செல்லும் பொழுது, ஆசிரியர் படிக்கும் நம்மையும் அவ்விடத்திற்கே அழைத்துச் செல்கிறார். அவ்விடத்தில் சாரகுமாரனும் தேர்ப்பாகன் முடிநாகனும் பரபரப்புடனும், துணிவுடனும் தோன்றும் காட்சிகள் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
முரசமேடை இரகசியம் அறிந்து கொண்ட இருவரும், புதிய பாண்டியரிடம் தங்கள் அனுபவங்களை எடுத்துக் கூற அதை அவர் பெரும்பொருட்டாக கருதாமல், தன் பேரன் அரசியல் நுணுக்கம் மற்றும் இராஜ தந்திரங்களை கற்றுக்கொள்ள எண்ணி, பழந்தீவுப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்கிறார். தன் அறிவுத் திறமையாளும் படைபலத்தாலும், அரசியல் நுணுக்கங்களாலும் கபாடபுரத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் கடின உழைப்பையும் கூறும் இடங்களில் சாரகுமாரனுக்கு மட்டுமல்ல, அக்காலத்தில் நாட்டை ஆண்டு வந்த மன்னர்களை நினைத்தால் வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
சாரகுமாரனின் பெற்றோராக அநாகுல பாண்டியனும் - திலோத்தமையும் சில இடங்களில் மட்டுமே தென்படுகிறார்கள். பழந்தீவுப் பயண ஏற்பாடுகளின் போது தாய் திலோத்தமை தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். என்னதான் பாண்டிய நாட்டு அரசியாக இருந்தாலும், தன் பிள்ளை எனும் பொழுது தாய்மைக்கே உரிய பாசப் போராட்டம் எழத்தான் செய்கிறது. முடிவில் முதிய பாண்டியர் பேச்சுக்கு மறுப்பு சொல்ல யாரால் முடியும்?
பழந்தீவுப் பயணம் ஆரம்பமாகிறது...
பயணத்தின் முதல் நாடான எயினர் நாட்டில், யாத்ரீகர்கள் போன்று வேடம் பூண்டு சாரகுமாரனும் முடிநாகனும் முதிய பாண்டியர் அறிந்து வரச் சொன்ன விஷயங்களை ஆராயத் தொடங்குகிறார்கள். என்னதான் இசை, இலக்கியம் என்று இளைய பாண்டியன் கலை உள்ளம் படைத்தவராக இருந்தாலும், "மீன் குஞ்சுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமா?" என்பதற்கு இணங்க பல்வேறு உத்திகளாலும் தந்திரமான பேச்சுக்களாலும் எய்னர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தன் மொழித் திறமையால் தப்பிக்கிறார்.
எயினர் நாட்டின் "நாத கம்பீரம்", "கலஞ்செய் நீர்களம்" ஆகிய இடங்கள் வியக்க வைக்கின்றன. அடுத்ததாக, கொலை மறவர்கள் வாழும் இடத்தில் அங்குள்ள மன்னனையும், மக்களையும் தன் இசைத்திறமையால் வெற்றி காண்கிறார். கொலையுள்ளம் கொண்டவர்கள் கூட இசையில் மயங்கி விடத்தான் செய்கிறார்கள்.
இந்நூலின் பல இடங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து "இசையும் ஒரு மொழியே" என்பது போல் சிறப்பாக பாவிக்கிறார் ஆசிரியர். இறுதியில் பல்வேறு தீவுகளை ஆராய்ந்து தன் தாய்நாடு திரும்பும் இளைய பாண்டியனுக்கு பழந்தீவுப் பயணம் வெற்றிப் பயணமாக அமைகிறது.
பயணத்தின் சுவாரஸ்யங்களையும், அனுபவங்களையும் தன் பாட்டனாரிடமும், பெற்றோரிடமும், குருக்களிடமும் பகிர்ந்து கொள்கிறார். இதற்கிடையில் கண்ணுக்கினியாளை காண வேண்டுமென்ற ஆர்வமும், ஆசையும் அவரைத் துரத்துகிறது. இப்படியாக அவளைக் காண இரகசியமாக சாரகுமாரன் செல்வது மீண்டும் முதிய பாண்டியருக்குத் தெரிய வர, எப்படியாவது இக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் காண்கிறார்.
அடுத்ததாக "இசைநுணுக்க இலக்கணம்" அரங்கேற்றத்திற்காக சிகண்டியாசிரியரும், சாரகுமாரனும் ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அரசியல் மட்டுமே பேசும் முதிய பாண்டியரிடம் அரங்கேற்றத்திற்கான அனுமதியையும் பெற்று அதை இனிதே நிறைவு பெறச் செய்கிறார் சிகண்டியாசிரியர்.
"கவிஞனின் எழுத்தாணியும், பாணர்களின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவர்களிடமிருந்து கீழே நழுவி விடக்கூடாது." என்று கூறும் ஒவ்வொரு முறையும் இளையபாண்டியன் கலா ரசிகனாக ரசிக்க வைக்கிறார். இறுதியில், "எதிர்கால வரலாறு தன்னையும், தனக்காகப் பிறந்த இசையிலக்கண நூலையும் பற்றி அறிகிற அளவு, உலகம் தன் காதலின் ஏமாற்றத்தை எங்கே அறியப் போகிறது!" என்று ஏக்கத்தோடு தன் அரண்மனையை நோக்கிச் செல்லும் சாரகுமாரனின் காதல் தோல்வியை தழுவியுள்ளதாக முடித்திருப்பது படிப்பவர்கள் மனதையும் சற்று கலங்கச் செய்கிறது.
இராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள் தாய் நாட்டிற்காக தன் உயிரை மட்டுமல்லாமல், காதலையும் தியாகம் செய்யத்தான் வேண்டும் போல.