சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே
ஜெர்மன் மொழியில் 1922 - ஆம் ஆண்டில் "ஹெர்மன் ஹெஸ்ஸே" என்பவரால் எழுதப்பட்ட "சித்தார்த்தன்" நாவல் 1950 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் 1958 - ஆம் ஆண்டில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களால் மொழிபெயர்த்துள்ள இந்நாவல் மொழிபெயர்ப்பு போன்று இல்லாமல் இந்திய தத்துவங்களை தமிழிலேயே படிப்பதுபோல் அமைந்துள்ளது. இந்நாவல் கௌதம சித்தார்த்தன் என்ற புத்தர் பற்றிய வரலாறு இல்லை. இந்நாவல் ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஞானம் பெற முடியும் என்ற பாதையை தரக்கூடியது.
ஒவ்வொரு மனிதனுக்கும் "தேடுதல்" என்ற ஒன்று உண்டு. தேடுதல் என்பது இங்கே பெரும்பாலும் பொருள் சார்ந்தது என்றே நம்பப்படுகிறது. ஆனால் தேடுதல் என்பதை ஞானத்தை தேடுதல்; தன்னுள்ளே தன்னைத் தேடுதல் ஆகும். இந்தத் தேடுதலைத் தான் அன்றிலிருந்து இன்று வரை ஞானிகள் பலரும் இடையறாது செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வகையில் இத்தேடுதலைத் நோக்கி செல்லக் கூடியவன் சித்தார்த்தன் என்ற ஒரு அந்தணகுமாரன்.
இந்த நாவல் அந்தண குமாரன், சமணருடன், கௌதமர், கண் விழிப்பு, கமலா, மக்களிடையில், சம்சாரம், ஆற்றுப் படுகை, தோணிக்காரன், குமாரன், ஓம், கோவிந்தன் என்று மொத்தம் 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
நுண்ணறிவும், ஞானவேட்கையும், பெருங் கல்விமானாகவும் வளர்ந்த சித்தார்த்தனுக்கு தன் இதயத்தில் மட்டும் மகிழ்ச்சி என்பதே இல்லை என்று உணர்கிறான். எனவே அவண் ஒரு சமணன் ஆகி விட எண்ணுகிறான். இதை தன் நண்பனிடமும், தந்தையிடமும் கூறுகிறான்.
"சீறிச் சினமொழி கூறுதல் அந்தணர்க்கு அழகல்ல. ஆனால் என் இதயத்தில் வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. மறுமுறை இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து நான் கேட்கக்கூடாது." என்று எழுந்து செல்லும் அவனுடைய தந்தை கட்டிய கரங்களுடன் நின்ற சித்தார்த்தனை நோக்கி, "ஏன் நிற்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு அவன் மறுமொழியாக, "ஏன் என்பது தங்களுக்கே தெரியும்." என்று கூறுகிறான். வெறுப்புடன் அறையை விட்டு வெளியேறிய அவர் தன் படுக்கைக்கு செல்கிறார்.
ஆனால் மறுநாள் வரை தன் கைகளைக் கட்டிக்கொண்டு அங்கேயே நிற்கிறான் சித்தார்த்தன். இறுதியாக அவனுடைய தந்தை சித்தார்த்தனுடைய தோள்களைத் தொட்டு பின்வருமாறு கூறுகிறார்.
"நீ கானகம் செல்வாய். சமணனாகி விடுவாய். கானில் உனக்குப் பேரானந்தம் கிட்டுமானால், திரும்பி வந்து எனக்கும் அதைக் காட்டு. அங்கு உனக்கு வெறும் பிரமையே மிஞ்சுமானால் அப்பொழுதும் திரும்பி வா. இருவரும் சேர்ந்து மறுபடியும் தெய்வங்களை நோக்கி வேள்விகள் புரிவோம். இப்பொழுது செல்க. உன் தாயை வணங்கி எங்கே செல்கிறாய் என்பதை அவளிடம் கூறு" என்று சொல்லி விட்டு சென்றுவிடுகிறார்.
சமணர்களிடம் சென்ற சித்தார்த்தன், "நான்" எனும் பாவனையை விட்டொழிக்கும் வழி பல கற்றான். தொல்லைகளை ஏற்று தன்னைத் தானே வருத்தி பசி, தாகம், அடைப்பு இவற்றை கடந்தான். இருப்பினும் பழையபடி அவன் 'நான்' ஆகி 'சித்தார்த்தன்' ஆகி சுமை தாங்க முடியாத துன்பத்தையே உணர்கிறான். மேலும் தன் நண்பனிடம் நண்பா! சமணர்களிடம் நான் தெரிந்து கொண்ட இவ்வளவையும் ஒவ்வொரு பொது விடுதியிலும், வேசி வீட்டிலும், வண்டி அடிப்பவர்கள் இடையிலும்,சூதர்கள் இடையிலும் விரைவாகவும் எளிதாகவும் கற்றுக் கொண்டு விடலாம்" என்று கூறி அங்கிருந்து விடை பெற்று புத்தரிடம் சென்று தன் நண்பனுடன் சேர்ந்து அவருடைய உரைகளை கேட்கிறான்.
அங்கும் அவன் புத்தரிடம் வாதம் செய்கிறான். அப்போது புத்தர், "சமணனே, நீ சமர்த்தன். நன்றாக பேசத் தெரிந்தவன் நீ. எனதன்பா, சாமர்த்தியம் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்" என்கிறார்.
"நான் யார்முன் தாழ வேண்டுமோ அந்த ஒருவரை ஒரே ஒருவரைக் கண்டு கொண்டேன். மற்ற யார் முன்னும் என் பார்வையைத் தாழ்த்த மாட்டேன். இந்த மனிதரின் போதனைகளே என்னை வசப்படுத்தாத போது இனி வேறு யாருடைய போதனைகளும் என்னைக் கவர முடியாது." இவ்வாறு நினைத்த சித்தார்த்தன் அவரிடம் நண்பனை விட்டு விட்டு விலகிச் செல்கிறான்.
புத்தரை விட்டு தனது வழியில் சென்ற சித்தார்த்தன் ஆழ்ந்து சிந்திக்கிறான். அப்போது அவனுக்கு ஒரு எண்ணம் எழுகிறது.
"என்னைப் பற்றி நான் எதுவும் அறியாமல் இருப்பதற்குக் காரணம், சித்தார்த்தன் என்னில் வேற்றாளாக, என்னால் உணரப்படாதவனாக இருந்து விட்டதற்குக் காரணம் ஒன்றிருக்கிறது. ஆம். ஒன்றே ஒன்றுதான் காரணம். நான் என்னையே அஞ்சினேன். என்னைவிட்டே விலகி ஓடிக் கொண்டிருக்கிறேன். அறிவைக் கடந்த உள்நடுவை, ஆதிமூலத்தை, ஆத்மனை உயிரை, பரமனை தேடிக் காணும் பொருட்டு என்னிலிருந்தே நான் விலகிச் செல்லவும், என்னையே அழித்துக் கொள்ளவும் விரும்பினேன். அப்படிச் செய்ததில்தான் நான் வழிதவறிப் போனேன். இனி சித்தார்த்தனைத் தட்டிச் செல்ல மாட்டேன். இனி ஆத்மாவைப் பற்றியோ உலகத் துயர்களைப் பற்றியோ என் சிந்தனைகளைச் செலுத்த மாட்டேன். அழிவுக்கு அப்பால் இருக்கிற ரகசியத்தை உணரும் பொருட்டு இனி நான் என்னை வருத்தி அழித்துக்கொள்ள மாட்டேன். யோக சாஸ்திரம், அதர்வ வேதம், துறவு மற்றும் எந்த போதனைகளையுமே இனி நான் பயில மாட்டேன். நான் இனி எனக்கே மாணவனாக இருப்பேன்; என்னுள்ளேயே சித்தார்த்தனின் ரகசியத்தை எதையும் கண்டறிவேன்" என்று சிந்திக்கிறான்.
இறுதியில் கமலா என்ற தாசியை சந்திக்கிறான். அவளிடமிருந்தும் தாம் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறான். அவள் காமஸ்வாமி என்ற வணிகனிடம் வேலைக்கு அனுப்புகிறாள். நன்றாக சம்பாதிக்கிறான். குடி, கூத்து, கமலா, வீடு மற்றும் வேலைக்காரர்கள் என்று இன்ப வாழ்வு வாழ்கிறான். மீண்டும் ஒரு நாள் தனது பாதை இது அல்ல என்று அங்கிருந்தும் புறப்பட்டு செல்கிறான். சித்தார்த்தன் சென்ற செய்தியை கேட்ட தாசி கமலா அன்றிலிருந்து யாரையும் அவள் தன் வீட்டில் ஏற்பதில்லை; வீட்டை மூடியே வைத்தாள். கிளம்பிய சித்தார்த்தன் ஓடத் துறையில் தோணிக்காரன் வாசுதேவனை சந்திக்கிறான். இப்போது தோணிக்காரனிடம் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பவன் நதியிடமும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான்.
இதற்கிடையில் ஒரு நாள் தாசி கமலா தன் மகனுடன் சேர்ந்து புத்தரை சந்திக்கச் செல்கிறாள். இடையில் பாம்பு தீண்டி சித்தார்த்தனிடமே சேருகிறாள். அங்கு சித்தார்த்தன் தன் மகன் என்று அறிந்து கொள்கிறான். கமலாவின் இறப்பிற்கு பின் சித்தார்த்தன் தன் மகனை தன்னிடம் வைத்து பாதுகாக்கிறான். ஆனால் அவன் சித்தார்த்தனிடம் இருக்க விரும்பாமல் பிரிந்து செல்கிறான். ஆனால் சித்தார்த்தன் தன் மகனை பிரிந்து வாழ்வது கடினமாக இருக்கிறது என்று அவனைத் தேடி நகரத்திற்கு செல்கிறான். சென்றவன் மீட்டும் வாசுதேவனை சந்திக்கிறான். வாசுதேவன் மூலம் நதியிடம் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்கிறான்.
புத்தரிடம் சேர்ந்த கோவிந்தனும் தனது இதயமும் அமைதியின்மையாய் இருக்கிறது எனக் கருதுகிறான். மேலும் நதியருகே ஒரு தோணிக்காரக் கிழவன் இருக்கிறான் என்றும் அவன் ஒரு ஞானி என்றும் கேள்விப்பட அவனைப் பார்க்க ஆசைப்பட்டு வருகிறான். அங்கு சென்றவன் அது தன் நண்பன் சித்தார்த்தன் என்று அறிந்து கொள்கிறான். சித்தார்த்தன் இப்பொழுது அவனுக்கு நதியிடம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை போதிக்கிறான்.
இந்த நாவலை நாம் முதலில் படிக்கும் பொழுது புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது நமக்கு புரிபடத் தொடங்கும். மொத்தம் 150 பக்கங்களுக்கும் குறைவான இந்த நாவல் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மிகச்சிறந்த புத்தகம்.
இப்புத்தகத்தைப் பற்றியும் ஆசிரியர்(களைப்) பற்றியும் சில குறிப்புகள்:
1. ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியை ஹெர்மன் ஹெஸ்ஸே எதிர்த்ததால் அங்கு வாழ முடியாமல்
சுவிட்சர்லாந்து குடிமகனாகி வாழ்ந்து வந்தார்.
2. ஹெர்மன் ஹெஸ்ஸே குடும்பத்தினர்(தாத்தா, தாய், தந்தை) பலரும் கேரளாவில் கிறிஸ்துவ
ஊழியத்திலும் கல்வி அளிப்பதிலும் இருந்துள்ளனர்.
3. இந்நாவலை எழுத ஹெர்மன் ஹெஸ்ஸேவிற்கு பத்தாண்டுகள் பிடித்தன.
4. 1972 - ஆம் ஆண்டில் கார்னாட் ரூக்ஸ் என்ற இயக்குனர் சித்தார்த்தனாக சசிகபூரையும், கமலா
என்ற தாசியாக சிம்மி கிர்வாலையும் வைத்து ஆங்கிலத்தில் படமாக எடுத்துள்ளார்.
5. 1946 ஆம் ஆண்டு இந்நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
6. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மொழிபெயர்ப்பாளர் திருலோக சீதாரம் அவர்கள் தன்
சொந்த முயற்சியால் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றை கற்றுக் கொண்டவர்.
7. மேலும் திருலோக சீதாரம் அவர்கள் பத்திரிகைத் துறையில் இருந்ததோடு "சிவாஜி" என்ற கலை
இலக்கிய ஏட்டை 30 ஆண்டு காலம் நடத்தியவர்.
8. ஹெஸ்ஸே அவர்கள் காலமானதை வானொலியில் இரவு செய்தி அறிவிக்க, அதைக் கேட்ட
அளவிலேயே திருலோக சீதாராம் அவர்கள் வீட்டின் புழக்கடைக்குச் சென்று, உயிர் நீத்தாருக்காக
ஒரு முழுக்கு போட்டுள்ளார்.
9. பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது குடும்பத்துடன் சீதாரம் மிகவும் நெருங்கி
பழகியவர். பாரதியின் மனைவி செல்லம்மாள் இறுதிக் காலத்தில் கஷ்டப்பட்டபோது சீதாராம் அவர்கள்
அவர்களுக்கு துணையாய் இருந்து உதவிகள் பல செய்துள்ளார். செல்லம்மாள் திருலோக சீதாரம்
மடியிலேயே உயிர் துறந்துள்ளார்.