மண்வாசம் - தமிழச்சி தங்கபாண்டியன்
கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர், அரசியல்வாதி மற்றும் பேச்சாளர் என்ற பன்முக அடையாளத்துக்குச் சொந்தக்காரர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள். அரசியல்வாதியாக இருந்தாலும் எழுத்தை கைவிடாமல் தொடர்ந்து கவிதை, கட்டுரை என்று எழுதுபவர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள். ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வரும் "டாக்டர் விகடன்" இதழில் தனது கிராமத்தையும் கிராமத்திற்குரிய மண் மருத்துவ அடையாளங்களை வாசகர்களுக்கு அடையாளப்படுத்தியவர். அக்கட்டுரைகள் இப்போது "மண்வாசம்" என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த மண்வாசம் என்ற புத்தகம் "மண்ணும் மருத்துவமும்..!", "மண்ணும் மனசும்..!" என்ற இரண்டு பகுதிகளாக 30 கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.
இந்த "மண்ணும் மருத்துவமும்..!" என்ற பகுதியில் உள்ள கட்டுரைகள் யாவும் தனது கரிசல் காட்டில் வாழ்கின்ற எளிய மக்களின் மருத்துவ குணத்தை அல்லது அவர்களுக்கு தெரிந்த மருத்துவ அறிவை வாசகர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். வெயில் கால நோய்களோ அல்லது மழைக்கால நோய்களோ கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த ஒரு உன்னதமான மருத்துவ ரகசியம் அஞ்சறைப்பெட்டி. தன்னை சுற்றி இருக்கின்ற செடிகள், கீரைகள் மற்றும் அஞ்சறைப்பெட்டி இதை வைத்து கை மருந்து வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் நம் பாட்டிகள். அந்தப் பாட்டிகள் சொல்லும் கை பக்குவங்களை வாசகர்களுக்கு எளிதாக தமிழில் சுட்டிக்காட்டுகிறார்.
"மண்ணும் மனசும்..!" என்ற பகுதியில் தன்னுடைய இருந்த, பழகிய தனக்கு உதவி செய்த இதயங்களை அவர்களுடைய வெள்ளந்தி மனசை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இன்றைய நவநாகரீக காலகட்டத்தில் தன் மனைவி அல்லது பிள்ளைகளின் நிறைகளை பட்டியலிட இன்றைய தயங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டில் வேலை பார்த்தவர்களின் ஒவ்வொரு நிறைகளையும் சுட்டிக்காட்டி அவர்களை பெருமைப்படுத்தி இருப்பது நமக்கு நம்முடைய பார்வை கோணத்தை சற்று மாற்றும்.
தமிழச்சி அவர்களின் எழுத்து நடை நன்றாகவே அவருக்கு கை கொடுக்கிறது. உதாரணமாக "மண்ணும் மனசும்..!" என்ற பகுதியில் உள்ள விசுவாசம் என்ற பகுதியில் உள்ள எழுத்து நடை நம்மை வசீகரப்படுத்துகிறது. "தனிமையில் இருக்கப் பிடிக்காத நிலா, நீண்ட தார்ச்சாலையில் செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கையில் என்னைப் பார்த்து விட்டது. 'ஊர்வரை என்னையும் கூட்டிப்போயேன்' எனச் சிணுங்கிய அதனோடு பயணித்தேன். இடையில் கல்குறிச்சி வந்தவுடன் வேலன் மாமாவின் நினைவு வர, நிலவும் அங்கேயே உட்கார்ந்து விட்டது." ஒன்று நிலவுக்கு தமிழச்சியை பிடித்திருக்கிறது அல்லது தமிழச்சிக்கு நிலவைப் பிடித்திருக்கிறது. எனவேதான் இருவரும் ஒன்றாக உக்காந்து விட்டார்கள் போலும்.
அதே நேரத்தில் தங்கள் வீட்டில் வேலை பார்த்தவர்களின் நிறைகளை சுட்டிக் காட்டிய தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் தங்களுடைய சிறுகுறைகளையும் சுட்டி காட்டி இருப்பது அவருடைய எழுத்துக்குப் பலம் சேர்க்கிறது மற்றும் அவருடைய பெருந்தன்மையையும் உயர்ந்த உள்ளத்தையும் காண்பிக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையே பிணக்கு நேரும் போதெல்லாம் நேர் செய்கின்ற பாலங்களாக அக்காலத்தில் அந்த வீட்டில் வேலை பார்த்த கணக்கு பிள்ளைகளோ அல்லது வீட்டு வேலையாட்களோ இருந்தனர் என்று சுட்டிக் காட்டும் தமிழச்சி அவர்கள் தங்களுக்கும் தங்கள் வீட்டில் வேலை பார்த்த வேலன் மாமா என்பவருக்கும் உள்ள உறவை நேர்த்திப்பட சுட்டிக்காட்டி உள்ளார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் "அவளுக்கு நிலா என்று பெயர்" என்று ஒரு கவிதை தொகுப்பை வெளியிட்டு இருப்பார். நாம் இப்புத்தகத்தை படித்த பின்பு சொல்லலாம்; "தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு நிலவு என்ற பெயர்" என்றோ; அல்லது நிலவுக்கு சொந்தக்காரி என்றோ. காரணத்தை இந்த புத்தகத்தை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
கிராமத்தில் பிறந்திருந்தாலும் தமிழச்சி தங்கபாண்டியன அவர்கள் தங்கள் ஊரைப் பற்றியும் தன் ஊர்களில் மனிதர்களின் குணங்களைப் பற்றி சொல்லும் பொழுது ஒவ்வொன்றும் கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது. நாமும் நம் கிராமத்தை நம் கிராமத்து எளிய மனிதர்களின் அன்பைஅனுபவிக்கவில்லையே என்று ஒரு ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது. தன்னை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்மையாக தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு அதை எழுத்தில் வடிப்பது என்பது ஒரு அசாதாரணமான காரியமே. அந்த அசாதாரண நிகழ்வை மிக சாதாரணமாக லாவகமாக கையாண்டு இருக்கிறார் தங்கச்சி தங்கபாண்டியன் அவர்கள்.
கிராமத்து மனிதர்களின் வாய் நிறைய பேச்சும், வாஞ்சை நிறைந்த அன்பும், நேருக்கு நேராக பட்டென்று பதிலை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது அந்த எளிய மனிதர்களின் பாசம் தெரிகிறது. ஆனால் கிராமத்தில் அவர்கள் படும் வலியும் வேதனையும் வீட்டாரின் மன அழுத்தங்களும் நமக்கு அவர்கள் கூறிடும் பொழுது கண்களில் நம்மையும் மீறி கண்ணீர் சில நேரம் வரத்தான் செய்கிறது.
நகரத்தில் வாழ்ந்தாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் வெள்ளந்தி மனசை அவர் எழுதிய இந்த சிறு வரியின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
"நல்ல களையான முகத்தில், ஊற்றுகின்ற வியர்வை அவளது அழகைக் கூட்டியிருந்தது என்று நினைத்தவுடன், இந்த நினைப்பே மிகப்பெரிய அப்பத்தம் என்று தோன்றியது. உழைப்பின் சோர்வில், வதங்கி வயிற்றுப் பிழைப்புக்காகக் காயும் இவளின் முகத்தில் அழகைத் தரிசிப்பது எனக்குள் ஒருவித குற்ற மனப்பான்மையைத் தந்தது."
மஞ்சணத்தி, ஆற்றுமண், செம்மண், சுருக்குப்பை, கிடை ஆட்டுப்பால், இளநீர், கரிசல் மண், எளிய மனிதர்கள் என தன்னைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை நமக்குத் தந்த இந்த தமிழச்சி தங்கபாண்டியன அவர்கள் தன் கிராமத்தை, மனிதர்களை, எழுத்தை விடாமல் தொடர வேண்டும் என்பதே ஆசை.